மதுரை மீனாட்சி அம்மன் கோவிலின் நடை அடைப்பு-கோவில் நிர்வாகம் அறிவிப்பு

Madurai Meenakshi Amman Temple Walk Closure - Temple Administration Notification-Madurai Meenakshi Amman Temple Details

சந்திர கிரகணம் மற்றும் சூரிய கிரகனங்களில் அனைத்து கோவில்களிலும் கோவில் நடையும் அடைக்கப்படுவது வழக்கம். இந்நிலையில், தற்பொழுது வர இருக்கும் சந்திர கிரகணத்தை முன்னிட்டு மதுரை மீனாட்சி அம்மன் கோவிலின் நடை அடைக்கப்படும் என கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

நவம்பர் 8 ஆம் தேதி பிற்பகல் 2.39 மணி முதல் 6.19 மணி வரை சந்திர கிரகணம் நடைபெறுவதால் அன்று மதுரை மீனாட்சி அம்மன் கோவிலின் நடை அடைக்கப்படும் என கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. சந்திர கிரகணதை முன்னிட்டு காலை 9.30 மணியில் இருந்து இரவு 7.30 மணி வரை கோவில் நடை அடைக்கப்படும் என்றும் 8 ஆம் தேதி காலை 7 மணியளவில் அன்னாபிஷேகம் நடைபெற்று பின்னர் கோவில் நடை சாத்தப்படும். மேலும், இரவு 7.30 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு பக்தர்கள் சுவாமி தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சந்திர கிரகணதை முன்னிட்டு மதுரை மீனாட்சி அம்மன் கோவிலை சார்ந்த 22 உபகோவில்களில் இதே நேரத்தில் நடை அடைக்கப்படும். மேலும் நவம்பர் 7 ஆம் தேதி 108 திருவிளக்கு பூஜை மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் நடைபெறும் என்று கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

RECENT POSTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here