முக்கிய அரசாணை வெளியீடு! தமிழ்நாடு மின்சார வாரியத்தில் 200 புதிய பணிகளை TNPSC மூலம் நிரப்பிட ஒப்புதல்..!

மாநில அரசின் Tangedco-வில் சுமார் 200 தொழில்நுட்ப உதவியாளர்களை பணியமர்த்துவதர்கான ஒப்புதலை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (TNPSC) அளித்துள்ளது. எரிசக்தி துறையானது கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் வெளியிட்ட உத்தரவில், நஷ்டத்தில் இயங்கும் அனைத்து பொதுத்துறை நிறுவனங்களும் சுமார் 25க்கும் மேற்பட்ட காலிப்பணியிடங்களுக்கு நேரடி ஆட்சேர்ப்பை நடத்த நிதித்த்துறை அரசிடம் இருந்து முன் அனுமதி பெற வேண்டும் என்று தெரிவித்தது.

Govt Notification for TANGEDCO to Recruit 200 Technical Assistants through TNPSC

TNPSC Latest News

இந்நிலையில், Tangedco தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனர் கடந்த ஆண்டு அரசுக்கு எழுதிய கடிதத்தில், 8000 கள உதவியாளர்கள்(field assistants), 850 மதிப்பீட்டாளர்கள் (assessors), 600 தொழில்நுட்ப உதவியாளர்கள் (technical assistants) உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் காலியாக உள்ள 10 ஆயிரத்து 260 பணியிடங்களை நிரப்புவதற்கான அனுமதியை அரசு தரவேண்டும் என்று தெரிவித்தார்.

இதுகுறித்து, GO தெரிவித்துள்ள கருத்தில், Tangedco எதிராக தாக்கல் செய்யப்பட்ட அவமதிப்பு மனு மீதான சென்னை உயர்நீதிமன்றத்தின் உத்தரவை பரிசீலித்து சில நிபந்தனைகளுடன் 10 ஆயிரத்து 260 காலியாக உள்ள பணியிடங்களில் 200 தொழில்நுட்ப உதவியாளர் பணியிடங்களை முதலில் நிரப்புவதற்கு ஒப்புதல் அளிக்க அரசாங்கம் முடிவு செய்துள்ளதாக தெரிவித்தார்.


RECENT POSTS IN JOBSTAMIL.IN