சபரிமலையில் இன்று மகரவிளக்கு பூஜை – 2 லட்சத்திற்கும் அதிகமான பக்தர்கள் வருகை

Makaravilakku Puja at Sabarimala today - more than 2 lakh devotees attend-More Than 2 Lakh People In Sabarimalai

சபரிமலை ஐயப்பன் கோவிலில் இன்று மகரவிளக்கு பூஜை நடக்கிறது. இதையொட்டி, சபரிமலைக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை அதிக அளவில் அதிகரித்து வருகிறது.

பக்தர்களின் வசதிக்காக சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது. சபரிமலையில் இன்று நடைபெறும் மகரவிளக்கு பூஜையை காண லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தந்துள்ளனர். இதையொட்டி, பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் செய்யப்பட்டு வருகிறது.

இந்நிலையில், மகரஜோதியை பக்தர்கள் காண சிறப்பு ஏற்பாடாக கில் டாப், பாண்டித்தாவளம் உள்ளிட்ட இடங்கள் சீரமைக்கப்பட்டு வருகிறது. மேலும் பக்தர்கள் ஆங்காங்கே கூடாரம் அமைத்து ஓய்வு எடுக்க வசதிகள் செய்து கொடுக்கப்பட்டு உள்ளது. இந்த மகரஜோதியை தரிசனம் செய்வதற்காக சபரிமலையில் இன்று சுமார் 2 லட்சத்திற்கும் அதிகமான பக்தர்கள் குவிந்துள்ளனர்.

இதனால் சபரிமலையை சுற்றியுள்ள பல்வேறு இடங்களில் எங்கு பார்த்தாலும் வரும் வழியில் கூடாரங்களாக காட்சி அளிக்கிறது. இதில் பக்தர்கள் கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் தங்கியுள்ளனர். அதே சமயம் பக்தர்களின் பாதுகாப்பிற்காக சபரிமலையில் சுமார் 3 ஆயிரத்துக்கும் அதிகமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

RECENT POSTS IN JOBSTAMIL

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here