‘ஜிகர்தண்டா 2’ படத்தின் ‘மாமதுர’ பாடல் வெளியீடு!

Jigarthanda 2
Jigarthanda 2

ஜிகர்தண்டா 2 படத்தில் இடம்பெற்று உள்ள ‘மாமதுர’ பாடலின் வீடியோவை படக்குழு வெளியிட்டு உள்ளது. கடந்த 2014 ஆம் ஆண்டு வெளியான படம் ஜிகர்தண்டா. மேலும் இந்த படத்தில் சித்தார்த், பாபி சிம்ஹ, லட்சுமி மேனன், கருணாகரன் ஆகியோர் நடித்து உள்ளனர். மேலும் இப்படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகயும் வரவேற்பை பெற்று உள்ளது.

மேலும் ‘ஜிகர்தண்டா’ படத்தின் வெற்றியை தொடர்ந்து 8 வருடங்களுக்கு பிறகு கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் அந்த படத்தின் இரண்டாம் பாகம் தற்போது உருவாகி உள்ளது. அந்த படத்தில் எஸ்.ஜே.சூர்யா மற்றும் ராகவா லாரன்ஸ் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து உ ள்ளனர். அதோடு ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் இப்படத்தின் தமிழ்நாடு வெளியீட்டு உரிமையை பெற்று உள்ளது.

ALSO READ : WhatsApp பயனர்களுக்கு சூப்பர் அப்டேட்! என்னனு தெரியுமா? உடனே பாருங்க!!!

மேலும் இப்படம் தீபாவளியை முன்னிட்டு நாளை சர்வதேச அளவில் திரையரங்குகளில் வெளியாக உள்ளது. சந்தோஷ் நாராயணன் இந்த படத்திற்கும் இசை அமைத்து உள்ளார். இந்நிலையில் ‘ஜிகர்தண்டா 2’ படத்தில் இடம்பெற்று உள்ள ‘மாமதுர’ பாடலின் வீடியோவை படக்குழு வெளியிட்டு உள்ளது. மேலும் அந்த பாடல் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து உள்ளது.

அதோடு இந்தப் பாடல் ஆறே ஷாட்களில் எடுக்கப்பட்டு உள்ளதாகவும், ஒரே டேக்கில் அனைத்து ஷாட்களும் ஓகே ஆனதாகவும் படக்குழுவினர் தெரிவித்து உள்ளனர்.

அனைத்து விதமான தகவல்களையும் உடனுக்குடன் அறிந்துகொள்ள TELEGRAM அல்லது WHATSAPP குழுவில் இணைந்து கொள்ளுங்கள்