சென்னையில் இன்று உச்சகட்ட பாதுகாப்பு..! காரணம் இதுதான்!!

Maximum security in Chennai today Do you know why

பல்வேறு நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக நாட்டின் பிரதமரானா நரேந்திர மோடி அவர்கள் தமிழ்நாட்டுக்கு இன்று வருகை தருகிறார். இதற்காக அவர் ஐதராபாத்திலிருந்து இன்று பிற்பகல் 1.30 மணிக்கு தனி விமானம் மூலம் சென்னை வருகிறார்.

இந்நிலையில், இதன் காரணமாக சென்னையில் உச்சகட்ட பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மாலை 3.30 மணிக்கு சென்னை எம்ஜிஆர் சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு சென்று அங்கு சென்னை மற்றும் கோவை இடையேயான வந்தே பாரத் ரயில் சேவையை தொடங்கி வைக்க உள்ளார்.

இதையடுத்து, சென்னை விமான நிலையத்திற்கு வரும் பிரதமர் மோடியை தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் வரவேற்கிறார். பிரதமரின் சென்னை வருகையின் போது விழா நடைபெறும் இடங்களைச் சுற்றியுள்ள சாலைகளிலும், ஐஎன்எஸ் அடையார் முதல் சென்டரல் ரயில் நிலையம் வரையிலும், போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டு உள்ளது. பிரதமரின் பாதுகாப்பு பணியில் 22 ஆயிரம் காவல்துறையினர் ஈடுபட உள்ளனர். டிரோன்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.


RECENT POSTS IN JOBSTAMIL.IN