செழிக்கட்டும் தமிழ்நாடு! சிறக்கட்டும் பொங்கல் திருநாள் என்று பொங்கல் வாழ்த்து கூறிய முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்!

May Tamil Nadu prosper Happy Pongal Day Chief Minister M.K. Stalin-Greeting For Pongal Wishes In CM MK Stalin

தை திருநாளாம் பொங்கல் திருநாள் தமிழர்களால் போற்றப்படும் ஒரு பண்டிகையாகும். தை முதல் நாள் சூரியனுக்கு பொங்கலிட்டு தெய்வமாக வழிபடுவது வழக்கம். அடுத்தநாள் மாட்டு பொங்கல் மூன்றாம் நாள் காணும் பொங்கலாக கொண்டாடப்பட்டு வருகிறது.

இந்நிலையில், தமிழ்நாடு முழுவதும் நாளை பொங்கல் திருநாள் கொண்டாடப்பட உள்ள நிலையில், அரசியல் தலைவர்கள் பலரும் பொங்கல் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் பொங்கல் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

அதன்படி, ஜனநாயக நெறியில், சட்டத்தின் மாண்பு காத்து, மாநிலத்தின் உரிமையைச் சட்டப்பேரவையில் நிலைநாட்டிய மகிழ்ச்சியுடன் தமிழ்நாட்டின் பொங்கல் விழா தொடங்கியுள்ளது. ஒவ்வொருவர் இல்லத்தின் வாயிலிலும் ‘தமிழ்நாடு வாழ்க’ எனக் கோலமிட்டு, தை முதல் நாளை வரவேற்போம். செழிக்கட்டும் தமிழ்நாடு! சிறந்து இனிக்கட்டும் பொங்கல் திருநாள்! என தெரிவித்துள்ளார்.

RECENT POSTS IN JOBSTAMIL

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here