மெகா தேசிய பழங்குடியின திருவிழா..! இதை யார் திறந்து வச்சானு தெரியுமா?

Mega National Tribal Festival Do you know who opened this-Mega National Tribal Festival

டெல்லியில் ஆதி மஹோத்சவ் என்ற மெகா தேசிய பழங்குடியின விழாவை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்தார். பழங்குடியின சுதந்திரப் போராட்ட வீரர் பிர்சா முண்டாவின் சிலைக்கு பிரதமர் மோடி மலர் தூவி மரியாதை செய்தார். பழங்குடியினரின் கலாச்சாரம், பாரம்பரியம், கலை உள்ளிட்டவற்றை கொண்டாடும் வகையில் நிகழ்ச்சி தொடங்கப்பட்டுள்ளது.

நாட்டின் பாரம்பரியம், முன்னேற்றம் ஆகியவற்றிற்கு பெரிதும் பங்காற்றிய பழங்குடி மக்களின் நலனுக்காக பிரதமர் மோடி பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். அந்த வகையில், பழங்குடியினர் கலாச்சாரத்தை தேசிய அளவில் காட்சி படுத்தும் வகையில், டெல்லியில் உள்ள மேஜர் தியான் சந்த் தேசிய அரங்கத்தில் இன்று ஆதி மகோத்சவம் என்ற பெயரிலான மெகா தேசிய பழங்குடியின திருவிழாவை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்.

இந்த நிகழ்ச்சியல், பழங்குடி கலாசாரம், கைவினை பொருட்கள், உணவு பொருட்கள், வர்த்தகம் மற்றும் பாரம்பரிய கலை ஆகியவை காட்சிப்படுத்தப்பட உள்ளன. மேலும், இந்த நிகழ்ச்சியானது வருகிற 27 ஆம் தேதி வரை நடைபெறும் என்றும் இதில் 200-க்கும் மேற்பட்ட ஸ்டால்கள் அமைக்கப்பட்டுள்ளது என்றும் பிரதமர் மோடி தெரிவித்தார்.

RECENT POSTS IN JOBSTAMIL

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here