வானிலை ஆய்வு மையம் புதிய தகவல்! தமிழகத்தில் மழை வருமா? வரதா?

Chance of heavy rain in Tamil Nadu Chennai Meteorological Department Notification-Rain Detail Reports

தமிழகத்தில் அக்டோபர் 29 ஆம் தேதி முதல் வடகிழக்கு பருவமழை தொடங்க உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது. இந்நிலையில் நேற்று முன்தினம் உள்தமிழகம், கேரளா, தெற்கு உள்கர்நாடகா, ராயலசீமா உள்ளிட்ட பல பகுதிகளில் வடகிழக்கு பருவமழை தொடங்கியது.

வடகிழக்கு பருவமழை தொடக்கத்தால், தமிழகத்தில் பல இடங்களில் மழை பெய்து வருகிறது. வளிமண்டல கீழடுக்கு சுழற்சி தென்மேற்கு வங்க கடல் மற்றும் அதனை ஒட்டிய தென் இலங்கை கடலோர பகுதிகளில் நிலவுவதால் இன்று (31/10/2022) முதல் நவம்பர் 3 ஆம் தேதி வரை தமிழகத்தில் ஒரு சில இடங்களில் பரவலாக மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக தெரிவித்துள்ளது.

இந்நிலையில், தமிழகத்தில் ஒரு சில இடங்களில் மழை பெய்து வருவதாக ஆய்வு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வடகிழக்கு பருவமழை தென்னிந்திய பகுதிகளில் வலுபெற உள்ளதால், வரும் 4-ம் தேதி வரை தமிழத்தில் அதிக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்யும். நாளை தமிழகம் மற்றும் புதுவையில் கன முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

RECENT POSTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here