20 நிமிட இடைவெளியில் நீல வழியில் இயக்கப்படும் மெட்ரோ ரெயில்கள்! இதுதான் கரணம்…

Metro trains run on the blue route at 20 minute intervals 06.11.2023
நீல வழியில் இயக்கப்படும் மெட்ரோ ரெயில்கள்

பச்சை வழித்தடத்தில் மெட்ரோ ரெயில்கள் வழக்கம் போல் இயக்கப்பட்டு வருகிறது. அதை தொடர்ந்து விம்கோ நகர் மெட்ரோ ரெயில் நிலையத்தில் திடீர் தொழில்நுட்ப கோளாறால் நீல வழித்தடத்தில் 20 நிமிட இடைவெளியில் மெட்ரோ இரயில்கள் இயக்கப்பட்டு வருகிறது. மேலும் மின்சார உபகரணங்களில் தொழில்நுட்ப கோளாரை சரி செய்யும் பணி நடந்து வருவதாக மெட்ரோ ரெயில் நிர்வாகம் தெரிவித்து உள்ளது.

அதை பற்றி சென்னை மெட்ரோ ரெயில் நிர்வாகம் வெளியிட்டு உள்ள செய்தியில் கூறி இருப்பது:

“விம்கோ நகர் மெட்ரோ ரெயில் நீல வழித்தடத்தில் இன்று காலை 11.20 மணியளவில் மேல்நிலை மின்சார உபகரணங்களில் ஏற்பட்ட திடீர் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டது. இதன் காரணமாக விம்கோ நகர் மெட்ரோ ரெயில் நிலையத்தில் இருந்து சுங்கச்சாவடி மெட்ரோ ரெயில் நிலையம் வரை 9 நிமிட இடைவெளியில் ரெயில்கள் இயக்கப்படும். அதை தொடர்ந்து மெட்ரோ ரெயில்கள் ஒரு வழிப் பாதையில் 20 நிமிட இடைவெளியில் இயக்கப்பட்டு வருகின்றன.

ALSO READ : நடிகர் கமல்ஹாசனின் 234-வது படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு!

அதை தொடர்ந்து 9 நிமிடத்திற்கு ஒருமுறை நீலவழித்தடத்தில் சுங்கச்சாவடி மெட்ரோ ரெயில் நிலையத்தில் இருந்து ஏ.ஜி- டி.எம்.எஸ், நந்தனம் வழியாக விமான நிலையம் வரை செல்லும் மெட்ரோ ரெயில் வழக்கம்போல் இயக்கப்பட்டு வருகிறது. தற்போது விம்கோ நகர் மெட்ரோ ரெயில் நிலையத்தில் மேல்நிலை மின்சார உபகரணங்களில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாரை சரிசெய்யும் பணியில் தொழில் நுட்ப வல்லுனர்கள் ஈடுபட்டு உள்ளனர். அதோடு தொழில்நுட்ப கோளாறு விரைவில் சரி செய்யப்பட்டு வழக்கம் போல் மெட்ரோ ரெயில்கள் இயக்கப்படும்.

மேலும் பச்சை வழித்தடத்தில் வழக்கம்போல் மெட்ரோ ரெயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. மெட்ரோ ரெயில் பயணிகளுக்கு ஏற்பட்ட இந்த எதிர்பாராத திடீர் தடங்கல்களுக்கு சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனம் வருந்துகிறது” என்றும் அந்த செய்தியில் கூறப்பட்டு உள்ளது.

அனைத்து விதமான தகவல்களையும் உடனுக்குடன் அறிந்துகொள்ள TELEGRAM அல்லது WHATSAPP குழுவில் இணைந்து கொள்ளுங்கள்