சித்தா, ஆயுர்வேதா படிப்புகளுக்கான தரவரிசை பட்டியலை வெளியிட்டார் அமைச்சர்..!

0
Minister released the rank list for Siddha and Ayurveda courses-Siddha And Ayurveda Rank List Published

மாநில சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் ஆயுர்வேதா, சித்தா, யுனானி, ஹோமியோபதி படிப்பிற்கான தரவரிசை பட்டியலை வெளியிட்டுள்ளார். சித்தா, ஆயிர்வேதா படுப்புகளுக்காக ஐந்து மருத்துவக் கல்லூரிகள் உள்ளது. அதில், அரசு ஆயிர்வேதா கல்லூரி, 2 சித்தா கல்லூரி, தலா ஒரு யுனானி, ஹோமியோபதி போன்ற கல்லூரிகள் உள்ளது.

அரசு சார்பில் சித்தா, ஆயுர்வேதா படிப்புகளுக்காக மொத்தம் உள்ள 5 கல்லூரிகளில் 280 இடங்கள் உள்ள நிலையில் அதில், 7.5 சதவீத இட ஒதுக்கீட்டின்கீழ் 21 இடங்களும், மற்ற இடங்கள் 259-ம் உள்ளன.

சித்தா, ஆயுர்வேதா படிப்புகளுக்காக 26 தனியார் சுயநிதி மருத்துவக் கல்லூரிகளில் 1660 இடங்கள் உள்ளன. அதில் 762 அகில இந்திய ஒதுக்கீடு இடங்களாகவும், நிர்வாக இடஒதுக்கீட்டிற்கு 425 இடங்களும் உள்ளன. அரசு ஒதுக்கீட்டு இடங்களாக 822 இடங்களும், 7.5 சதவீத இட ஒதுக்கீட்டிற்கு 115 இடங்களும் உள்ளது. இதற்கான தரவரிசை பட்டியலை அமைச்சர் வெளியிட்டுள்ளார்.

RECENT POSTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here