துருக்கி- சிரியா எல்லையில் கடந்த பிப்ரவரி 6ஆம் தேதி சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இங்கு அடுத்தடுத்து நிலநடுக்கம் ஏற்பட்டதால் அதிக உயரமான கட்டடங்கள் எல்லாம் சீட்டு கட்டு போல் சரிந்து விழுந்தன. இந்த இடிபாடுகளில் நிறைய பேர் சிக்கினர். இதுவரை இந்த நிலநடுக்கத்தால் தோராயமாக 50 ஆயிரம் பேர் உயிரிழந்துவிட்டனர். ஏராளமானோர் காயமடைந்தனர். மேலும் பலர் வீடுகளை இழந்து தவித்து வருகிறார்கள்.
இந்த நிலநடுக்கத்தில் சிக்கி 45 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்து உள்ளனர். இந்த நிலநடுக்கத்தில் சிறியவர்கள், பெரியவர்கள், பெண்கள் மற்றும் குழந்தைகள் என அனைத்து தரப்பினரும் சிக்கி பாதிப்படைந்தனர். அவர்களில் பிறந்து 2 மாதங்களே ஆன குழந்தை ஒன்றும் தப்பி பிழைத்தது. நிலநடுக்க இடிபாடுகளில் 128 மணிநேரம் சிக்கி இருந்த அந்த குழந்தையை மீட்பு படையினர் மீட்டனர். எனினும், இந்த குழந்தையின் தாயாரை பற்றிய விவரங்கள் தெரியவில்லை. ஒருவேளை நிலநடுக்க பாதிப்பில் அவர் உயிரிழந்து இருக்க கூடும் என நம்பப்பட்டது.
ஆனால், வேறொரு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அந்த பெண் குழந்தையின் தாயார் கண்டறியப்பட்டார். மரபணு பரிசோதனை வழியே குழந்தை மற்றும் தாயார் 56 நாட்களுக்கு பின்னர் ஒன்றிணைந்து உள்ளனர். இதனை உக்ரைன் நாட்டின் உள்விவகார துறையில் பணியாற்றி வரும் ஆன்டன் கெராஸ்செங்கோ என்பவர் தனது டுவிட்டரில் புகைப்படத்துடன் வெளியிட்டு மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டார்.
RECENT POSTS IN JOBSTAMIL.IN
- ரேஷன் கார்டு ரத்து பண்றாங்களா? உங்க ரேஷன் கார்ட பத்திரமா வச்சுக்கோங்க..!
- மத்திய அரசாங்க வேலை செய்ய ரெடியா இருங்க! நேரடி நேர்காணல் முறையில் வேலைவாய்ப்பு வெளியீடு!
- பல்வேறு வகையான பணியிடங்களை நிரப்ப முடிவு! AAICLAS லிமிடெட்டில் வேலை! மிஸ் பண்ணாதீங்க!
- நீங்கள் எதிர்ப்பார்த்த வேலை வந்துவிட்டது! RITES நிறுவனத்தில் புதியதோர் வேலை வெளியீடு!
- தமிழகத்தில் பணிபுரிய ஓர் அறிய வாய்ப்பு! திருவண்ணாமலை மாவட்ட சுகாதார சங்கத்தில் வேலை அறிவிப்பு!