சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ள செய்தியில், தமிழகத்தில் மிதமான மழையானது தொடர்ந்து 5 நாட்களுக்கு இருக்க வாய்ப்பிருப்பதாக தெரிவித்துள்ளது.இது பற்றி வானிலை ஆய்வு மையம் விரிவாக தெரிவித்திருப்பதாவது:
நேற்று (செவ்வாய்) காலை ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு பகுதியானது தென் கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனுடன் ஒட்டியிருக்கும் தெற்கு அந்தமான் கடல் போன்ற பகுதிகளில் நிலவியது. தொடர்ந்து இந்தக் காற்றழுத்த தாழ்வு பகுதியானது மாலை காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறினது. மேலும் இது தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் வலுப்பெற்று வடமேற்கு திசை நோக்கி நகர்ந்தது.
தொடர்ந்து ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக இன்று (புதன் ) காலை 05.30 மணி அளவிற்கு தென் மேற்கே போர்ட் ப்ளேயலிருந்து ஏறக்குறைய 530 கிலோ மீட்டருக்கு நிலை கொண்டது. அதுமட்டுமல்லாது இன்று மாலை அதே பகுதியில் வட-வடமேற்கு திசையில் நகர்ந்து புயலாக வலுபெறவிருக்கிறது. அதனையடுத்து நாளை தீவிர புயலாக காலையும், மிகத்தீவிர புயலாக நள்ளிரவு வாக்கிலும் ஏற்படக்கூடும். இந்தப் புயல்களானது தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனுடன் ஒட்டியிருக்கும் மத்திய வங்கக்கடல் பகுதிகளில் காணப்படக்கூடும்.
அதற்குப்பின் வடக்கு-வடகிழக்கு திசையில் திரும்பி, கடற்கரையை கடக்க வாய்ப்பு உள்ளது. தொடர்ந்து காற்றின் வேகமானது புயல் கரையை கடக்கும் போது 100 முதல் 130 கி.மீ வேகத்திற்கு வீசக்கூடும்.
அதனையடுத்து அடுத்த இரண்டு நாட்களுக்கு சென்னையில் ஓரளவு மேகமூட்டத்துடன் இருக்கும். தொடர்ந்து லேசான மழையாக நகரின் ஒரு சில பகுதிகளில் பெய்யக்கூடும். அதனைத் தொடர்ந்து மே -10 அதாவது இன்று லேசானது முதல் மிதமான மழையானது இடி மற்றும் மின்னலுடன் தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் உள்ள ஒரு சில இடங்களில் காணப்படக்கூடும்.
மே-11 முதல் மே-14 வரையுள்ள 4 நாட்களிலும் லேசானது முதல் மிதமான மழையாக மட்டும் தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் உள்ள ஒரு சில இடங்களில் காணப்படக்கூடும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டிருக்கின்றது.
RECENT POSTS IN JOBSTAMIL.IN
- முதல்வர் அறிவிப்பு: சிபிஎஸ்இ பாடத்திட்டத்தில் தமிழ்மொழி கட்டாயம்..!
- ஜூன் 1 ஆம் தேதி முதல் புத்தம் புதிய மாற்றாங்களா? சூப்பர்..!
- மெட்ரோ ரயில் நிலையத்துக்கு போகணுமா? ஈஸியா போகலாம்! நீங்களும் படிச்சு தெரிஞ்சுக்கோங்க!
- சூப்பரான செய்தியை ஸ்டாலின் அவர்கள் அறிவித்துள்ளார்! என்னனு தெரியுமா உங்களுக்கு?
- தமிழ்நாடு அரசின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு! ரேஷன் கார்டு வச்சிருக்க உங்களுக்குத்தான்..! படிச்சு தெரிஞ்சுக்கோங்க!