தென் மேற்கு பருவமழை முடிந்து வரும் அக்டோபர் மாதம் வடகிழக்கு பருவமழை தொடங்க உள்ளதால் தமிழகத்தின் பல பகுதிகளில் மழைநீர் தேங்காமல் பாதுகாக்கும் வகையில், முன் எச்சரிக்கை நடவடிக்கையாக மழைநீர் வடிகால் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. அதன்படி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் சென்னையில் நடக்கும் மழைநீர் வடிகால் பணிகளை நாளை ஆய்வு செய்ய இருக்கிறார்.
மேலும், சென்னையில் பாடி, திரு,வி,.க.நகர், பெரம்பூர் ஆகிய பகுதிகளில் மழைநீர் வடிகால் பணிகளின் நிலை குறித்து முதல் அமைச்சர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் ஆய்வு செய்ய இருகிறார். அதன்பிறகு, பெரம்பூர் தணிகாச்சலம் கால்வாயை அகலப்படுத்தி அதனை மேம்படுத்தும் பணியை தமிழக முதலமைச்சர் தொடங்கி வைக்க உள்ளார்.
Also Read : விநாயகர் சதுர்த்தி : கண்களை பறிக்கும் அழகோடு விற்பனைக்கு தயாரான விநாயகர் சிலைகள்!