வேலை இல்லாத இளைஞர்களுக்கு மாதந்தோறும் உதவித்தொகை – காங்கிரஸ் தேர்தல் அறிக்கை வெளியீடு!

0
Monthly stipend for unemployed youth - Congress manifesto release-Congress Release Manifesto

குஜராத் மாநிலத்தில் சட்ட மன்ற தேர்தல் நடைபெறுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சட்ட மன்ற தேர்தல் வருகிற டிசம்பர் 1 மற்றும் 5 ஆம் தேதிகளில் இரு கட்டங்களாக நடைபெறுகிறது.

குஜராத்தில் நடைபெறும் இந்த சட்டமன்ற தேர்தலில் ஆளுங்கட்சியான பாஜக, எதிக்கட்சியான காங்கிரஸ் மற்றும் ஆம் ஆத்மி கட்சிகள் போட்டியிட உள்ளன. அனல் பறக்கும் பிரச்சாரத்தில் காங்கிரஸ் கட்சி இன்று முதல் தேர்தல் அறிக்கையை வெளியிட்டுள்ளது.

காங்கிரஸ் கட்சி வெளியிட்ட அறிக்கையில், எரிவாயு சிலிண்டர்கள் விலை ரூ. 500-க்கு வழங்கப்படும் என்றும் குஜராத்தில் வேலை இல்லாத இளைஞர்களுக்கு மாதம் தோறும் ரூ. 3 ஆயிரம் உதவித்தொகை வழங்கப்படும் அதுமட்டுமல்லாமல்’ தனியாக வசிக்க்கும் பெண்கள், வயதான பெண்மணிகள்,விதவைப்பெண்களுக்கு மாதம் தோறும் ரூ. 2 ஆயிரம் வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here