தமிழகத்தில் 66 லட்சத்துக்கும் அதிகமானோர் அரசு வேலைக்காக காத்திருப்பு..! தமிழக அரசின் அதிர்ச்சி செய்தி!!

தமிழகத்தில் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் 10-ம் வகுப்பு, பிளஸ்-2, கல்லூரிப்படிப்பு முடித்து வெளியேறுபவர்கள் வேலைக்காக பதிவு செய்து வருகின்றன. பதிவு செய்யுபர்கள் தங்களுடைய வேலைவாய்ப்பு பதிவை புதுப்பித்தும் வருகின்றனர். அதாவது, 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை பதிவை புதிப்பிக்க வேண்டும். தவறும் பட்சத்தில் 2 மாதங்கள் சலுகைகள் வழங்கப்படுகிறது.

More than 66 lakh people are waiting for government jobs in Tamil Nadu Shocking news from the Tamil Nadu government read now

இந்நிலையில், மொத்தம் எதனை பேர் வேலைக்காக வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்துள்ளனர் என்பது குறித்து தகவல்கள் வெளியாகியுள்ளன. அந்த வகையில் கடந்த மாதம் 31 ஆம் தேதின் நிலவரப்படி பதிவு செய்து அரசு வேலைக்கு காத்திருக்கும் பெண்களின் எண்ணிக்கை 35 லட்சத்து 60 ஆயிரத்து 846; ஆண்களின் எண்ணிக்கை 30 லட்சத்து 94 ஆயிரத்து 630; மூன்றாம் பாலினத்தவர் எண்ணிக்கை 290, என மொத்தம் 66 லட்சத்து 55 ஆயிரத்து 766 பேராகும்.

Also Read : திருப்பதி எழுமலையானை தரிசிக்க செல்லும் பக்தர்களுக்கு முக்கிய அறிவிப்பு..! சீக்கிரம் பாருங்க…

மேலும், அவர்களில் 31 முதல் 45 வயது வரை உள்ளவர்கள் 18 லட்சத்து 51 ஆயிரத்து 474 பேர். 18 வயதுக்கு உட்பட்ட பள்ளி மாணவர்கள் 16 லட்சத்து 87 ஆயிரத்து 537 பேர். 46 முதல் 60 வயது வரையுள்ள பதிவுதாரர்கள் 2 லட்சத்து 56 ஆயிரத்து 68 பேர். 19 முதல் 30 வயது வரை உள்ள பலதரப்பட்ட கல்லூரி மாணவர்கள் 28 லட்சத்து 53 ஆயிரத்து 916 பேர். மாற்றுத்திறனாளிகளில் 1 லட்சத்து 47 ஆயிரத்து 284 பேர் பதிவு செய்து காத்திருக்கின்றனர். 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் 6,771 பேர் உள்ளனர்.