இந்தியா போஸ்ட் ஆபீசில் 98,000-க்கும் மேற்பட்ட காலியிடங்கள்! 23 வட்டங்களில் உள்ள 10வது, 12வது படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்!

10th and 12th Candidates Get Latest Post Office Jobs 2022

இந்திய குடிமக்களிடமிருந்து போஸ்ட்மேன், அஞ்சல் காவலர்கள் மற்றும் பிற பணிகளுக்கு விண்ணப்பிக்க தகுதியான விண்ணப்பங்களை இந்தியா போஸ்ட் அழைத்துள்ளது. மேலும் விவரங்களுக்கு கீழே ஸ்க்ரோல் செய்யவும்.

INDIA POST RECRUITMENT 2022:

More than 98,000 Vacancies in India Post Recruitment 2022! 10th and 12th passers in 23 circles can apply immediately!

தபால்காரர், அஞ்சல் காவலர்கள் மற்றும் பிற பதவிகளுக்கு விண்ணப்பிக்க தகுதியான இந்திய குடிமக்களிடமிருந்து விண்ணப்பங்களை இந்தியா அஞ்சல் துறை அழைத்துள்ளது. ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் இந்தியா போஸ்ட் இணையதளமான indiapost.gov.in இலிருந்து ஆட்சேர்ப்பு அறிவிப்பைப் டவுன்லோட் செய்யலாம். இந்த ஆட்சேர்ப்பு அறிவிப்பின்படி மொத்தம் 98,083 பணியிடங்கள் நிரப்பப்பட போகிறது. நாடு முழுவதும் உள்ள 23 அஞ்சல் வட்டங்களில் உள்ள இந்த காலி பணியிடங்களை நிரப்ப அரசு அங்கீகாரம் வழங்கியுள்ளது என்பது மிகவும் குறிப்பிடத்தக்கது.

இது மட்டுமல்லாமல், ஸ்டெனோகிராபர் தொடர்பான பதவிகளும் அங்கீகரிக்கப்பட்டுள்ளன. ஆந்திராவில் 1166 MTS பணியிடங்களும், 108 அஞ்சல் காவலர் பணியிடங்களும், 2289 தபால்காரர் பணியிடங்களும் நிரப்பப்பட உள்ளன. தெலுங்கானா வட்டத்தின் கீழ் 1553 தபால்காரர்கள், 82 அஞ்சல் காவலர்கள் மற்றும் 878 MTS அனுமதி பெற்றுள்ளனர்.

India Post Recruitment 2022 Eligibility Criteria

இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் 10 ஆம் வகுப்பு படித்திருக்க வேண்டும். அதுமட்டுமில்லாமல் கம்ப்யூட்டர் பற்றிய அடிப்படை விஷயங்கள் தெரிந்திருக்க வேண்டும். ஒரு சில பணிகளுக்கு இடைநிலை அல்லது 12 ஆம் வகுப்பு தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். ஒவ்வொரு பணிகளுக்கும் பல்வேறு வகையான நபர்களின் தேவைகள் இருப்பதால், விண்ணப்பதாரர்கள் கல்வித் தகுதிகள் மற்றும் விண்ணப்பங்களைச் சமர்ப்பிப்பதற்கான வழிமுறையை சரிபார்க்க அதிகாரப்பூர்வ அறிவிப்பைப் படிக்க வேண்டியது அவசியம்.

India Post Recruitment 2022 Vacancy Details

Postman: 59099 posts
Mailguard: 1445 posts
Multi-Tasking(MTS): 37539 posts

India Post Recruitment 2022 Age Limit

18 முதல் 32 வயதுக்குள் இருக்கும் விண்ணப்பத்தாரர்கள் இந்த தபால் அலுவலக வேலை காலியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்.

India Post Jobs 2022 Here’s how to apply

அதிகாரப்பூர்வ இணையதளமான indiapost.gov.in ஐப் பார்வையிட வேண்டும்.

முகப்புப் பக்கத்திற்குச் (Home Page) சென்று ஆட்சேர்ப்பு இணைப்பைத் தேர்ந்தெடுக்கவும்.

நீங்கள் விண்ணப்பிக்க விரும்பும் பணிகளை தேர்ந்தெடுத்து என்னென்ன ஆவணங்கள் தேவை என சரிபார்த்துக்கொள்ளுங்கள்.

ஆன்லைன் விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்யவும்.

சமர்ப்பித்து கட்டணம் செலுத்தவும்.

உங்களுடைய எதிர்கால பயன்பாட்டிற்காக விண்ணப்ப படிவத்தை பிரிண்ட் எடுத்துக் கொள்ளுங்கள்.

SOURCE LINK

OFFICIAL NOTIFICATION LINK


RECENT POSTS:

Leave a Reply

Your email address will not be published.

Back to top button
error: Content is protected !!