
இந்த உலகில் எதுவுமே நிரந்தரம் இல்லை. அப்படி இருக்கும் போது தோல்வி மட்டும் எப்படி நிரந்தரம் ஆகும். பல வண்ணங்களை சேர்த்தால் ஒரு அழகான ஓவியம் தோன்றும்… அதுபோல நம்முடைய மனதிற்கு அழகு சேர்ப்பது நல்ல எண்ணங்கள் தான். நாம் வாழ்கிற வாழ்க்கை கூட அழகு தான்… அந்த வாழ்கையை ரசிக்க தெரிந்தவர்களுக்கு… உங்கள் மனதை நல்ல எண்ணங்களால் நிரப்புங்கள்… அது உங்கள் வாழ்வில் நல்லதையே கொண்டு வந்து சேர்க்கும். வாழ்க்கை சறுக்கும் போது மனம் உடைந்து போக கூடாது. தோல்வியை சந்திக்காமல் யாரும் உயர்ந்ததில்லை. இந்த பக்கத்தில் உங்களுடைய வாழ்க்கைக்கு தன்னம்பிக்கை கொடுக்க கூடிய கவிதைகளை (Motivational Quotes in Tamil) காணலாம்!
Thannambikkai Kavithaigal
தன்னம்பிக்கை கவிதைகள்

நம்மால் முடிந்தவரை
செய்வதல்ல முயற்சி…
நினைத்ததை
முடிக்கும் வரை
செய்வதே
உண்மையான முயற்சி..!

எதிலும் வாழ
பழகிக்கொள்
அப்போது தான்
எதையும் தாங்கும்
இதயம் வரும்

உயரத்தை அடைய
நம்பிக்கை அவசியம்
அந்த நம்பிக்கை
உங்கள் மேல் இருப்பது
அத்தியாவசியம்

வெற்றி பெற விரும்பினால்,
தடைகளை உடைத்து செல்
நம்பிக்கையை
விதைத்து செல்

பணத்தால் சாதிக்க
முடியாததை கூட,
முயற்சியால்
சாதித்து காட்ட முடியும்

சாதிக்கும் எண்ணம்
ஆழ்மனதில்
தோன்றிவிட்டால்…
எது இருந்தாலும்
இல்லை என்றாலும்
சாதிக்க முடியும்…
உன் விடா
முயற்சியால்..!

சுமைகளை கண்டு
துவண்டு விடாதே…
இந்த உலகத்தை
சுமக்கும் பூமியே
உன் காலடியில் தான்!

வாய்ப்புக்காக காத்திருக்காதே
உனக்கான வாய்ப்பை
நீயே ஏற்படுத்திக்கொள்!

வெற்றி தொடக்கமும் அல்ல,
தோல்வி முடிவும் அல்ல…
முயற்சி ஒன்றே
அதை முடிவு செய்யும்!

கத்தி என்று தெரிந்தாலும்
துணிந்து கால் வை
போராட்டம் என்று தெரிந்தாலும்
துணிந்து போராடு
காலம் உன் கை பிடியில்
வெற்றி உன் காலடியில்

ஒரு நொடி துணிந்தால்
வாழ்க்கையை
முடித்து விடலாம்…
ஆனால்
ஒவ்வொரு நொடியும்
துணிந்தால்
அதே வாழ்க்கையை
ஜெயித்து விடலாம்!

தனியாக போராடுகிறேன்
வெற்றி கிடைக்குமா என்று
வருந்தாதே…
நீ தனியாக போராடுவதே
வெற்றி தான்..!

வெற்றி எனும்
இலக்கை அடைவதற்கு
யாரும் நமக்கான பாதையை
உருவாக்க மாட்டார்கள்
நாம் தான்
அதற்கான பாதையை
செதுக்க வேண்டும்!

உன்னை நம்பு…
உன் உழைப்பை நம்பு…
உன் முயற்சியை நம்பு…
உனக்காக
உதவி செய்வார்கள் என்று
யாரையும் நம்பி விடாதே..!

பத்தாவது முறையாக
கீழே விழுந்தவனைப் பார்த்து
பூமி சொன்னது…
நீ ஒன்பது முறை
எழுந்தவன் என்று..!