இந்தியாவின் பொருளாதாரம் பற்றிய முகேஷ் அம்பானியின் பேச்சால் பரப்பரப்பு…!

0
Mukesh Ambani's speech on India's economy spread-Mukesh Ambani Tell Indian Economy

குஜராத் மாநிலத்தின் காந்தி நகரில் உள்ள பண்டிட் தீன்தயாள் எனர்ஜி பல்கலைக்கழகம் செயல்பட்டு வருகிறது. இந்த பல்கலைக்கழகத்தில் 10-வது பட்டமளிப்பு விழா நேற்று நடைபெற்றது. இந்த விழாவில் பிரபல தொழிலதிபரும் உலக பணக்காரர்களில் ஒருவருமான முகேஷ் அம்பானி கலந்து கொண்டார்.

இதனை தொடர்ந்து, இந்த விழாவில் முகேஷ் அம்பானி கல்லூரி மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கிய பிறகு அவர் பேசுகையில், இனி வரும் காலங்களில் குறிப்பாக 2047 ஆம் ஆண்டுக்குள் இந்திய நாட்டின் பொருளாதாரம் 40 டிரில்லியன் டாலராக வளர்ச்சி அடைய வாய்ப்பிருப்பதாக கூறினார். இது தற்போதுள்ள நிலையை காட்டிலும் 13 மடங்கு கூடுதல் என அவர் தெரிவித்துள்ளார்.

இந்நிலையிள், அமெரிக்கா, சீனா, ஜப்பான் மற்றும் ஜெர்மனியை தொடர்ந்து உலக அளவில் பொருளாதாரத்தில் இந்தியா இப்போது இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார். 3 டிரில்லியன் டாலர் பொருளாதாரத்தில் இருந்து இந்திய நாடு வரும் 2047 வாக்கில் 40 டிரில்லியன் டாலர்களை கொண்டுள்ள நாடாக வளர்ச்சி அடையும். அது உலக அளவில் இந்தியாவை டாப் 3 பொருளாதார வளர்ச்சி கண்ட நாடாக இருக்க செய்யும்.

அடுத்து வரும் ஆண்டுகளில் இந்தியாவை வளர்ச்சி பாதைக்கு அழைத்து செல்லும் சக்திகளாக எரிசக்தி, பயோ எனர்ஜி மற்றும் டிஜிட்டல் துறைகள் முக்கிய பங்கு வகிக்கிறது. இந்த மூன்று புரட்சிகளும் சேர்ந்து நம்முடைய அழகான பூமியை காலநிலை நெருக்கடியிலிருந்து காப்பாற்ற உதவும்.

RECENT POSTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here