என்னது 3 மாசம் வரைக்கும் கெட்டுபோகத பாலா? ஆச்சிரியத்தில் உறைந்த மக்கள்!

My 3-month-old hasnt heard of milk yet People frozen in surprise-Aavin Update Details

தமிழகத்தில் பால் விற்பனை என்றாலே முதலில் நியாபகத்தில் வருவது ஆவின் பால் தான். அந்த வகையில், ஆவின் பால் நிறுவனம் தினசரி 40 லட்சம் லிட்டர் பாலை கொள்முதல் செய்கின்றனர். இதில் பாக்கெட் நிறத்திற்கேற்ப பால் வகைப்படுத்தபடுவது வழக்கம்.

1. சமன்படுத்தப்பட்ட பால் – நீல நிற பாக்கெட்டிலும்

2. நிலைப்படுத்தப்பட்ட பால் – பச்சை நிற பாக்கெட்டிலும்

3. நிறை கொழுப்பு பால் – ஆரஞ்சு நிற பாக்கெட்டிலும்

4. இருமுறை சமன்படுத்தப்பட்ட பால் – மெஜந்தா நிற பாக்கெட்டிலும்

5. டீமேட் பால் – சிவப்பு நிற பாக்கெட்டிலும்

என பல வகைகளில் தினசரி 30 லட்சம் லிட்டர் பால் விற்பனை செய்யப்படுகிறது. இந்நிலையில் புதிய அறிவிப்பை ஆவின் வெளியிட்டுள்ளது. இதில், 3 மாதங்களுக்கு கெட்டு போகாத அளவுக்கு ஆவின் டிலைட் புதிய பால் வகைகளை அறிமுகப்படுத்தபோவதாக தெரிவித்துள்ளது. இந்த ஆவின் டிலைட்டில் 3.5 சதவீத அளவுக்கு கொழுப்பும், 0% பாக்டீரியாவை கொண்டிருக்கும்.

நீண்ட தூரம் பயணம் செய்வோருக்கும், பேரிடர் காலங்களிலும் அதிக நாட்கள் கெட்டுபோகாமல் பாலை வைத்துருக்க இந்த ஆவின் டிலைட் வகை அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த ஆவின் டிலைட் பால் பாக்கெட்டின் விலை 500 மில்லி லிட்டர் 30 ரூபாய் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த ஆவின் டிலைட்டின் பால் வகை அதிக நாட்கள் கெடாமல் இருக்க ultra-high temperature தொழில்நுட்பத்துடன் பேக்கிங் செய்யப்படுகிறது.

RECENT POSTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here