என்னது 61 லட்சம் பரிசு தொகையா? இரட்டைசதம் அடித்த வெஸ்ட் இண்டீஸ் வீரர்!

0

West Indies Cricket Team Details: டி20 கிரிக்கெட் தொடர் அமெரிக்காவில் நடைபெற்று வருகிறது. இதில் அட்லாண்டா ஓபயர் அணியும் விளையாடி வருகிறது. இந்த அணியில் விளையாடும் வெஸ்ட் இண்டீஸ்யை சேர்ந்த 29 வயதான ரகீம் கார்ன்வெல் இப்போட்டியில் இரட்டை சதமடித்து அணிக்கு சிறப்பை சேர்த்தார்.

West Indies Cricket Team Details Rahkeem Cornwall scores double century for Atlanta Fire in T20 league
West Indies Cricket Team Details Rahkeem Cornwall scores double century for Atlanta Fire in T20 league

இவர் களத்தில் விளையாடிய பொழுது, மொத்தம் 77 பந்துகளில் 22 சிக்ஸர்களும் மற்றும் 17 பவுண்டரிகளும் அடித்து இறுதி வரை ஆட்டம் இழக்காமல் மொத்தம் 205 ரன்கள் எடுத்து அணியை வெற்றி பெற செய்தார். இறுதியில் இவர் விளையாடிய அட்லாண்டா அணி 20 ஓவர்களில் 1 விக்கெட் இழப்பிற்கு 326 ரன்களை குவித்தது.

இவர்களுக்கு எதிராக களம் இறங்கிய ஸ்கொயர் டிரைவ் அணி, அட்லாண்டா அணி எட்டிய இலக்கை அடையாமல் 172 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியுற்றது.

வெஸ்ட் இண்டீஸ் அணியை சேர்ந்த கார்ன்வெல் இந்த ரன்களை அங்கீகரிக்கப்படாத போட்டியில் எடுத்ததால் சாதனை பட்டியலில் இடம் பெறவில்லை. வெற்றி பெற்ற அட்லாண்டா ஓபயர் அணிக்கு பரிசு தொகையாக இந்திய ருபாய் மதிப்பில் 61 லட்சம் டி20 கிரிக்கெட் தொடரை நடத்தும் நிறுவனம் அறிவித்துள்ளது.


RECENT POST

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here