என்னது மறுபடியும் ஆன்லைன் வகுப்புகளா? அதிர்ச்சியில் மாணவர்கள்!

My online classes again Students in shock-To Start Online Class For Rain Holidays

தமிழகத்தில் அக்டோபர் 29 ஆம் தேதி முதல் வடகிழக்கு பருவமழை தொடங்க உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது. இந்நிலையில், தமிழகத்தில் பல இடங்களில் கனமழை பெய்து வருகிறது. தென்மேற்கு வங்க கடல் மற்றும் அதனை ஒட்டிய தென் இலங்கை கடலோர பகுதிகளில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுவதால் அக்டோபர் 31 ஆம் தேதி முதல் வடகிழக்கு பருவமழை தொடங்கியதால் தமிழகத்தின் வடமாவட்டங்களில் கனமழை கொட்டி தீர்த்து வருகிறது.

இந்நிலையில், கனமழை பெய்து வரும் மாவட்டங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பள்ளி, கல்லூரிகளுக்கு மாவட்ட நிர்வாகம் விடுமுறை அறிவித்து வருகிறது. இந்த மழையின் காரணமாக அதிக நாட்கள் விடுமுறை விடப்படுவதால், பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களில் கற்றல் திறன் பாதிக்கப்படும் என்பதால் தனியார் பள்ளிகளில் மீண்டும் ஆன்லைன் வழியில் வகுப்புகள் நடத்த நடவடிக்கை எடுக்கப்படுவதாக தெரிவித்துள்ளது.

பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களின் நன்மைக்காகவே இந்த ஆன்லைன் வழி கல்வி நடத்தப்படுவதாக தெரிவித்துள்ளனர். பள்ளிகல்வித்துறை ஆன்லைன் வழியில் வகுப்புகள் நடத்துவதற்கு தடை இல்லை என்று ஏற்கனவே அறிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

RECENT POSTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here