தமிழக அரசின் DHS யில் வேலை செய்ய விண்ணப்பங்கள் வரவேற்பு! மிஸ் பண்ணிடாதீங்க…!

Nagapattinam DHS notification for Microbiologist vacancy apply offline now

நாகபட்டினம் மாவட்டம் துணை இயக்குனர் சுகாதாரப்பணிகள் அலுவலக கட்டுப்பாட்டில் இயங்கிவரும் பொதுசுகாதார ஆய்வகத்தில் காலியாக உள்ள ஒரு நுண்ணுயிரியாளர் பணியிடம் தொகுப்பூதிய அடிப்படையில் நிரப்பிட விண்ணப்பங்கள் வரவேற்க்கப்படுகின்றன. இப்பணியிடம் முற்றிலும் தற்காலிகமானது என்பது குறிப்பிடத்தக்கது.

Microbiologist என்ற பதவிக்கு தற்போது ஒரே ஒரு காலியிடத்தை நிரப்புவதாக தெரிவித்துள்ளனர். இதற்கு விண்ணப்பதாரர் MBBS, MD படிப்பை படித்தவராக இருக்க வேண்டும். தேர்வு செய்யப்படும் நபர்களுக்கு மாத வருமானமாக ரூ.40 ஆயிரம் வழங்கப்படும். மேலும், வயது வரம்பு குறித்து எந்த தகவலும் அறிவிப்பில் குறிப்பிடவில்லை. இப்பதவிக்கு விண்ணப்பிக்க எந்தவொரு விண்ணப்பக்கட்டணமும் செலுத்த தேவையில்லை.

Also Read >> பாரதியார் பல்கலைக்கழக வேலைக்கு ஈமெயில் வழியாக விண்ணப்பங்கள் வரவேற்பு!

இப்பணியில் சேர விருப்பமும் தகுதியும் உள்ள நபர்கள் தங்களது பயோ-டேட்டா மற்றும் கல்வி விவரங்களை கீழே கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு பிப்ரவரி 20 ஆம் தேதிக்குள் அனுப்புமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய முகவரி

Executive Secretary,
District Health Society,
O/o Deputy Director of Health Services,
Collectorate 1st Entrance,
Nagapattinam-611003.

மேலும், DHS யின் அதிகாரபூர்வ அறிவிப்பினை தெரிந்துகொள்ள DHS Notification என்ற லிங்கை கிளிக் பண்ணவும்.

அனைத்து விதமான தகவல்களையும் உடனுக்குடன் அறிந்துகொள்ள TELEGRAM அல்லது WHATSAPP குழுவில் இணைந்து கொள்ளுங்கள்

Scroll to Top