வரலாற்று சாதனை படைத்த மாணவி நந்தினி வீட்டுக்கே போய் சர்ப்ரைஸ் கொடுத்த வைரமுத்து – தங்கத்தில பேனா பரிசு

தமிழகத்தில் கடந்த மார்ச் 13-ஆம் தேதி முதல் ஏப்ரல் 3 வரை பன்னிரெண்டாம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத் தேர்வு நடைபெற்றது. அதனையடுத்து பொதுத் தேர்வு முடிவுகளை பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் சென்னையில் நேற்று முன்தினம் வெளியிட்டார். பொதுத் தேர்வு முடிவுகளில் மொத்தம் 94 % மாணவ மாணவிகள் தேர்ச்சி அடைந்திருந்தனர்.

மாணவி நந்தினி வீட்டுக்கே போய் சர்ப்ரைஸ் கொடுத்த வைரமுத்து

அதில் திண்டுக்கல் மாணவி நந்தினி மாநில அளவில் முதலிடம் பிடித்திருக்கிறார். அதாவது மாணவி நந்தினி தமிழ் உள்ளிட்ட அனைத்து பாடங்களிலும் 100 மதிப்பெண்கள் வீதம் மொத்தம் 600/600 மதிப்பெண்கள் எடுத்து வரலாற்று சாதனை படைத்துள்ளார். மேலும் இவர் திண்டுகளில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளியான, திண்டுக்கல் அண்ணாமலையார் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் படித்துள்ளார். அதுவுமல்லாது இவருடைய தந்தை ஒரு சாதாரண தச்சுத் தொழிலாளி என்பதும் குறிப்பிடத்தக்கது.

அதனைத் தொடர்ந்து மாநில அளவில் முதலிடம் பிடித்த மாணவி நந்தினிக்கு பல தரப்பிலிருந்தும் பாராட்டி வாழ்த்து தெரிவிக்கப்பட்டது. அதனையடுத்து கவிஞர் வைரமுத்துவும் மாணவி நந்தினியை பாராட்டி வாழ்த்துப்பதிவை ட்விட்டரில் தெரிவித்திருந்தார். மேலும் அந்த வாழ்த்துச் செய்தியில் “அண்மையில் நான்பெற்ற தங்கப் பேனாவைத் தங்கை நந்தினிக்குப் பரிசளிக்கிறேன். திண்டுக்கல் வருகிறேன்; நேரில் தருகிறேன்” என்று தன்னுடைய தங்கப்பேனாவையே தருவதாக குறிப்பிட்டிருந்தார்.

இதனையடுத்து தான் வாழ்த்துச் செய்தியில் கூறியிருந்தவாறே கவிஞர் வைரமுத்து அவர்கள் திண்டுகல்லுக்கு இன்று சென்றார். அங்கு மாணவி நந்தினியினுடைய வீட்டிற்கு சென்றார். அங்கு மாணவியை நேரில் சந்தித்த அவர் தன்னுடைய தங்கப்பேனாவை அவரிடம் கொடுத்து வாழ்த்து தெரிவித்தார்.


RECENT POSTS IN JOBSTAMIL.IN