தேசிய பெண் குழந்தைகள் தினம் இன்று நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது!

National Girl Child Day 2023 is being celebrated across the country today
National Girl Child Day 2023 is being celebrated across the country today

National Girl Child Day 2023: தேசிய பெண் குழந்தைகள் தினம் இன்று இந்தியா கொண்டாடிவருகிறது. இந்திய சமுதாயத்தில் பெண்கள் எதிர்கொள்ளும் ஏற்றத்தாழ்வுகள், பெண் குழந்தைகளின் உரிமைகள், பெண் கல்வி, சுகாதாரம் மற்றும் ஊட்டச்சத்தின் முக்கியத்துவம் பற்றிய விழிப்புணர்வை ஊக்குவிப்பதன் அவசியம் குறித்த விழிப்புணர்வை பொதுமக்களிடையே பரப்புவதே இந்த நாளின் நோக்கம் ஆகும்.

பெண்கள் மற்றும் சிறுமிகள் எதிர்கொள்ளும் பாகுபாடு, சமத்துவமின்மை மற்றும் சுரண்டல் போன்ற பிரச்சனைகளை ஒழிப்பதற்கும் விழிப்புணர்வை ஏற்படுத்தவும் இந்த நாள் அனுசரிக்கப்படுகிறது.

2019-ம் ஆண்டில், ‘ஒளிமயமான நாளைக்காக பெண்களை மேம்படுத்துதல்’ என்றும், 2020-ல் ‘எனது குரல், எங்கள் பொதுவான எதிர்காலம்’ என்றும், 2021-ல், ‘டிஜிட்டல் தலைமுறை, எங்கள் தலைமுறை’ என்பதும் தேசிய பெண் குழந்தைகள் தினத்திற்கான கருப்பொருளாக இருந்தது.

பெண் குழந்தைகளுக்கான இந்த நாளில், மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சர் ஸ்மிருதி ஜூபின் இரானி மற்றும் மாநில அமைச்சர் முஞ்ச்பாரா மகேந்திரபாய் ஆகியோர் அரசு நிகழ்ச்சி ஒன்றில் கலந்துக் கொள்கின்றனர்.

பனியில் நனைந்த ரோஜாவே-என்
கனவை நனவாக்க வந்த ராஜாத்தியே…
உன் ரோஜா கன்னங்களை
என் முத்தமழையால் நனைக்க வாய்பளித்தவளே…

இரவு பகலெல்லாம் தொழுதேன்
இரவிலும் ஒளியாக நீ வாழவே…
உன் புன்னகையால்
என் வாழ்க்கையில் விளக்கேற்றினாயே…

பகலிலும் உன்னை பற்றியே கனவு கண்டேனே…
பால்நிலா போலவே நீ வருவாயெனவே…

நீ உறங்கையில் என் தேகம் உனக்கு தலையணை ஆகியதுவே…
நான் உறங்கையில் உன் புன்னகை என் கனவிலும் வந்ததுவே…

உன் தேகத்தை அழகழகான உடைகளில் அலங்கரித்தேனே…
அதையும் நான் அபத்தமில்லால்
அன்பாய் தான் உடுத்திவிட்டேனே…

உன் தாய் மொழியும்
என் தாய் மொழியும்
இனிய தமிழ் தானே…
கனிய கனிய உனக்கு நானும்
கற்பித்து கொடுத்தேனே…

RECENT POSTS IN JOBSTAMIL

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here