10th, Diploma படித்தவர்களும் மாதம்தோறும் ரூ.50,000 சம்பளத்தில் வேலை பார்க்கலாம்! NTPC லிமிடெட்டில் வேலை!

நேஷனல் தெர்மல் பவர் கார்ப்பரேஷன் லிமிடெட்டில் மேற்பார்வையாளர் வேலை
நேஷனல் தெர்மல் பவர் கார்ப்பரேஷன் லிமிடெட்டில் மேற்பார்வையாளர் வேலை

மத்திய அரசின் கீழ் இயங்கும் (NTPC -National Thermal Power Corporation Ltd) நேஷனல் தெர்மல் பவர் கார்ப்பரேஷன் லிமிடெட்டில் 10th, Diploma படித்தவர்களுக்கு வேலை அறிவிப்பு. 114 மேற்பார்வையாளர், மைனிங் சர்தார், சர்வேயர், பயிற்றுவிப்பாளர், ஓவர்மேன் (Supervisor, Mining Sirdar, Surveyor, Instructor, Overman) பணியிடங்களை நிரப்ப முடிவு. பணியிடமானது ராய்கர் (Raigarh) ஒதுக்கப்பட்டுள்ளது. விண்ணப்பிக்க 12 டிசம்பர் 2023 முதல் 31 டிசம்பர் 2023 வரை கால அவகாசம் கொடுக்கப்பட்டுள்ளது.

ALSO READ : வருமான வரித்துறையில் வேலை செய்ய விருப்பமா? அப்போ உடனே அப்ளை பண்ண ஸ்டார்ட் பண்ணுங்க!

விண்ணப்பதாரரின் அதிகபட்ச வயது 30 ஆக இருக்க வேண்டும். ஈஸியா ஆன்லைன் முறையில் விண்ணப்பித்து கொள்ளலாம். பொது விண்ணப்பதாரர்களுக்கு ரூ.300/- விண்ணப்ப கட்டணம் செலுத்த வேண்டும். SC/ ST, XSM, பெண் விண்ணப்பதாரர்களுக்கு விண்ணப்ப கட்டணம் கிடையாது. மாதச் சம்பளமாக ரூ.40,000 முதல் ரூ.50,000 வரை வழங்கப்படும். எழுத்துத் தேர்வு, திறன் தேர்வு, நேர்காணல் ஆகிய முறைகளில் தேர்வு முறை இருக்கும்.

மேற்கண்ட வேலைவாய்ப்பை பற்றி இன்னும் விரிவாக தெரிந்துக்கொள்ள Notification link -யில் கொடுக்கப்பட்டுள்ளது. விண்ணப்பிக்க Apply Link பயன்படுத்திக் கொள்ளுங்கள்.

அனைத்து விதமான தகவல்களையும் உடனுக்குடன் அறிந்துகொள்ள TELEGRAM அல்லது WHATSAPP குழுவில் இணைந்து கொள்ளுங்கள்

Scroll to Top