நெட்பிளிக்ஸ் பாஸ்வேர்டை பகிர்ந்தால் சிறைதண்டனை! பயனர்கள் கலக்கம்!

நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தை பயன்படுத்துபவர்கள் இனி பாஸ்வர்ட்டை உறவினர்களுக்கும் நண்பர்களுக்கும் பகிர்ந்தால் கிரிமினல் நடவடிக்கை எடுக்கப்படும் மற்றும் சிறை தண்டனை அளிக்கவும் வாய்ப்பிருப்பதாகவும் அரசு எச்சரித்துள்ளது. இது நம்ப இந்தியாவில் இல்லைங்க, இங்கிலாந்து அரசு அதிரடி நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது.

Netflix Password Don't Share Friends
Netflix Password Don’t Share Friends

நெட்பிளிக்ஸ் உலக அளவில் மிக பிரபல OTT தளமாக உள்ளது. தற்போது புதிய திரைப்படங்கள் அனைத்தையும் எளிதாக வீட்டிலிருந்தே நெட்பிளிக்ஸில் வாயிலாக காணலாம். இதன் காரணமாக நெட்பிளிக்ஸ் நிறுவனத்திற்கு 100 மில்லியன் டாலருக்கும் மேலாக நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இதனை அடுத்து நெட்பிளிக்ஸ் நிறுவனம் அளித்த புகாரின் அடிப்படையில் அந்நிறுவனத்தின் பாஸ்வேர்டை பகிர்ந்தால் அவர்கள் மீது கிரிமினல் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் குற்றம் உறுதி செய்யப்பட்டால் சிறை தண்டனை அளிக்கவும் வாய்ப்பு இருப்பதாகவும் இங்கிலாந்து அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது. இதனால் வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

RECENT POSTS IN JOBSTAMIL.IN

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here