மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு வெளியான புதிய அறிவிப்பு..! பள்ளிக்கல்வித்துறை எடுத்த அதிரடி நடவடிக்கை!!

New announcement for rain and flood affected students Action taken by School Education Department

தமிழக தென்மாவட்டங்களில் கடந்த வாரம் பெய்த வரலாறு காணாத கனமழை காரணமாக தூத்துக்குடி, கன்னியாகுமரி, திருநெல்வேலி மற்றும் தென்காசி ஆகிய நான்கு மாவட்டங்களில் உள்ள கிராமங்களில் வெள்ளம் சூழ்ந்தது. இதனால் பொதுமக்களின் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப்பட்டதுடன் மக்களின் இயல்பு வாழ்க்கையும் பெரிதும் பாதிக்கப்பட்டது. பெரும்பாலான மக்கள் இந்த வெள்ளத்தால் தங்கள் உடைமைகளை இழந்து தவித்து நின்றனர்.

இந்நிலையில், தென்மாவட்டங்களில் மழை, வெள்ள பாதிப்பால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தமிழக அரசு சார்பிலும், தனியார் தொண்டு நிறுவனம் சார்பிலும் நிவாரணப் பொருட்கள் வழங்கப்பட்டது. மேலும், தமிழக அரசு வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ரூ.6 ஆயிரம் நிவாரணம் வழங்க உள்ளதாக அறிவிக்கப்பட்டது. இதனையடுத்து, பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் வெள்ளம் காரணமாக புத்தகங்கள், சீருடைகள், சான்றிதழ்கள் உள்ளிட்டவை இழந்துள்ளனர்.

ALSO READ : வருகிற 31 ஆம் தேதி வரை சுங்கச் சாவடிகளில் கட்டணம் ரத்து – மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

வெள்ளத்தால் இழந்த கல்வி சான்றிதழ்களை மாணவர்களுக்கு இலவசமாக வழங்கப்படும் என்றும் தமிழக அரசு அறிவித்துள்ளது. மேலும், சீருடை, புத்தகங்களை இழந்த பள்ளி மாணவ, மாணவிகளுக்கு கூடுதலாக இரண்டு செட் பள்ளி சீருடைகள், நோட்டு புத்தகங்கள், பாட புத்தகங்கள் ஆகியவை வழங்க உள்ளதாக பள்ளி கல்வித்துறை செயலாளர் குமரகுருபரன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக, பள்ளிக் கல்வித் துறை சார்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும், கூடிய விரைவில் மாணவ மாணவியர்களுக்கு தேவையான உடைமைகள் வழங்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

அனைத்து விதமான தகவல்களையும் உடனுக்குடன் அறிந்துகொள்ள TELEGRAM அல்லது WHATSAPP குழுவில் இணைந்து கொள்ளுங்கள்

Scroll to Top