ரேஷன் அட்டை என்பது ஒவ்வொரு குடும்பத்துக்கும் மிகவும் முக்கியமான ஓன்று. தமிழக அரசின் எண்ணற்ற நல திட்டங்களை பெற்றுக்கொள்ள இந்த ரேஷன் கார்டு பயன்படுகிறது. அதுமட்டுமில்லாமல், இந்த ரேஷன் கார்டானது அடையாளமாகவும் திகழ்கிறது. அந்த காலம் முதல் இந்த காலம் வரை ரேஷன் கார்டு என்பது மக்களுக்கு மிகவும் அவசியமான ஓன்று. சமீபகாலமாய் ரேஷன் அட்டைதாரர்களுக்கு புதிய புதிய செய்திகள் வந்தவண்ணம் உள்ளது. அந்த செய்திகள் மக்கள் பயன்படும் வகையில் மகிழ்ச்சியான செய்தியாக வந்துகொண்டே இருந்தது. தற்போது புதிய செய்தி ஓன்று வந்துள்ளது.
ரேஷன் அட்டையினை ஆதார் எண்ணுடன் இணைக்கப்படாமல் இருந்தால் ரேஷன் கார்டு ரத்து செய்யப்படும் என்று புதிய தகவல் ஓன்று வெளியாகி உள்ளது. ஏற்கனவே ஆதார் எண்ணை இனைக்க மார்ச் மாதம் 31 ஆம் தேதி வரை அவகாசம் அளிக்கப்பட்டது. பின்னர் அது ஜூன் மாதம் 30 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்த கூடுதல் அவகாசத்திலும் மக்கள் அனைவரும் ஆதார் எண்ணை ரேஷன் கார்டுடன் இணைக்காவிட்டால் குடும்ப அட்டை ரத்து செய்யப்படும் என்று கூறப்படுகிறது. போலியான ரேஷன் அட்டைகளை தடுக்க இந்த நடவடிக்கை எடுக்கப்படுகிறதாக கூறப்பட்டுள்ளது.
தவறாம உங்க ரேஷன் கார்டுடன் ஆதார் எண்ணை இணைச்சிடுங்க மக்களே..!
RECENT POSTS IN JOBSTAMIL.IN
- முதல்வர் அறிவிப்பு: சிபிஎஸ்இ பாடத்திட்டத்தில் தமிழ்மொழி கட்டாயம்..!
- ஜூன் 1 ஆம் தேதி முதல் புத்தம் புதிய மாற்றாங்களா? சூப்பர்..!
- மெட்ரோ ரயில் நிலையத்துக்கு போகணுமா? ஈஸியா போகலாம்! நீங்களும் படிச்சு தெரிஞ்சுக்கோங்க!
- சூப்பரான செய்தியை ஸ்டாலின் அவர்கள் அறிவித்துள்ளார்! என்னனு தெரியுமா உங்களுக்கு?
- தமிழ்நாடு அரசின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு! ரேஷன் கார்டு வச்சிருக்க உங்களுக்குத்தான்..! படிச்சு தெரிஞ்சுக்கோங்க!