மக்கள் நியாய விலைக் கடைகளில் ரேஷன் பொருட்களை மிக குறைந்த விலையில் வாங்குவதற்காக ஒவ்வொரு குடும்பங்களுக்கும் தமிழக அரசு குடும்ப அட்டை அதாவது ரேஷன் கார்டை வழங்கியுள்ளது. இந்த ரேஷன் காட்டுகள் குடும்பத்தின் வருமானத்தை பொறுத்து 5 வகையாக பிரிக்கப்பட்டுள்ளது.
தமிழக ரேஷன் கடைகளில் மக்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்கள் அரசி, பருப்பு, கோதுமை போன்றவை மலிவான விலையில் மக்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. அதுமட்டுமல்லாமல், மக்களுக்கு சத்துள்ள உணவு பொருட்களான கேழ்வரகு போன்ற சிறுதானிய வகைகளையும் நியாய விலை கடைகள் மூலம் மக்களுக்கு வழங்குவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இந்நிலையில், ரேஷன் கடைகளில் தேங்காய் எண்ணெய் வழங்க வேண்டும் என்று மக்கள் கோரிக்கை வைத்தனர். இந்த கோரிக்கையை நிறைவேற்றும் வகையில் தற்பொழுது ஒரு புதிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி முதல் கட்டமாக கோவை, நீலகிரி, கன்னியாகுமரி, தென்காசி உள்ளிட்ட 4 மாவட்ட ரேஷன் கடைகளில் தேங்காய் எண்ணெய் வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. விரைவில் மாநிலம் முழுவதும் உள்ள கடைகளில் தேங்காய் எண்ணெய் வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
RECENT POSTS IN JOBSTAMIL.IN
- ChatGPT பத்தி தெரியுமா உங்களுக்கு? ஒரே மாதத்தில் 1 பில்லியன் பயனார்களை ஈர்த்து சாதனை! வெளியான புதிய தகவல்…
- பள்ளிகள் திறப்பை முன்னிட்டு 2,200 சிறப்பு பேருந்துகள் இயக்கம்..!
- மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் 100-வது பிறந்தநாள்..! முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மரியாதை!!
- 12வது படிச்சவங்களா? விமானத்தில் பறந்துக்கிட்டே வேலைபார்க்கலாம்…
- திருப்பதி செல்லும் பக்தர்களுக்கு ஒரு முக்கிய அறிவிப்பு..! இனி இந்த வாகனத்திற்கு அனுமதி கிடையாது!!