தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்தில் கொட்டப்போகும் மழை..!

new announcement It will rain in Tamil Nadu in the next 3 hours read it

தமிழகத்தில் தற்பொழுது கோடை வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், வானிலை ஆய்வு மையம் ஒரு மகிழ்ச்சியான செய்தியை வெளியிட்டுள்ளது. அதன்பட்டி, தென்னிந்திய பகுதிகளின்மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக தெரிவித்துள்ளது. இந்த மலையானது இன்று முதல் அடுத்த மூன்று நாட்களுக்கும் பெய்யும் எனவும் தெரிவித்துள்ளது.

சென்னை மற்றும் அதனை ஒட்டியுள்ள புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூதடத்துடன் காணப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், தமிழ்நாட்டில் பொறுத்தவரை அடுத்த 3 மணி நேரத்தில் நீலகிரி, கோயம்புத்தூர், திண்டுக்கல், ஈரோடு, திருப்பூர் ஆகிய 5 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக தெரிவித்துள்ளனர்.

கோடை வெயில் சுட்டெரிக்கும் நிலையில் தமிழகத்தில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வெளியான செய்தி மக்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியை அளித்துள்ளது.


RECENT POSTS IN JOBSTAMIL.IN