பள்ளிகளுக்கு அமைச்சர் போட்ட உத்தரவு..! என்னென்னு தெரியுமா?

new announcement Ministers order to schools You know what read immediately

தமிழகத்தில் தற்போது 1 முதல் 12 ஆம் வகுப்பு வரை படிக்கும் அனைத்துப் பள்ளி மாணவர்களுக்கும் கோடை விடுமுறை நடைபெறுகின்றது. இந்த கோடை விடுமுறையானது தற்போது முடிவடைய உள்ள நிலையில் அடுத்த கல்வி ஆண்டிற்கான வகுப்புகளானது வரும் ஜூன்-7 ஆம் தேதி முதல் துவங்கப்பட உள்ளது. இதனையடுத்து தமிழக பள்ளிகல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அதில் கூறியிருப்பதாவது:

இந்தக் கல்வியாண்டிற்கான அரசு பள்ளிகளினுடைய மாணவர் சேர்க்கையின்போது சுமார் 80,000 க்கும் அதிகமான மாணவர்கள் மே மாதத்தின்போது சேர்ந்திருக்கிறார்கள். மேலும் அரசு பள்ளிகளில் முதல்-அமைச்சரின் வானவில் மன்றம் மற்றும் புதுமைப்பெண் போன்ற பல்வேறான நலத் திட்டங்களின் மூலமாகவும் மாணவர்களுடைய சேர்க்கையானது உயர்ந்திருக்கின்றது. மேலும் எல்.கே.ஜி. மற்றும் யு.கே.ஜி. போன்ற வகுப்புகளில் இதுவரை 40,000 மாணவர்கள் 2,381 பள்ளிகளில் சேர்க்கப்பட்டிருக்கின்றார்கள்.

தொடர்ந்து நிதி நிலைமைக்கு ஏற்றவாறு படிப்படியாக ஆசிரியர்களுடைய கோரிக்கைகள் நிறைவேற்றப்படும். அதுமட்டுமல்லாமல் கடந்த கல்வியாண்டை விட வரும் கல்வியாண்டின்போது, மாணவர்களுடைய தேர்ச்சி விகிதத்தை அதிகரிக்க ஆசிரியர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும். இத்தேர்ச்சி விகிதத்தை வட மாவட்டங்களிலும் அதிகரிக்கும்படி அந்தந்த மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு அறிவுறுத்தியுள்ளதாக அமைச்சர் தெரிவித்தார். மேலும் வரும் கல்வியாண்டிற்கான பல முக்கிய தகவல்களையும் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்தார். தொடர்ந்து ஆசிரியர்கள் பள்ளிகளில் மாணவர்களிடையே தனியாக கட்ட்டணம் எதுவும் வசூல் செய்தால் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படுவதாகவும் அவர் கூறினார்.


RECENT POSTS IN JOBSTAMIL.IN