தமிழகத்தில் ரூ.762.30 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்ட தொழிநுட்ப மையங்கள் – திறந்து வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

new announcement Technology Centers built in Tamil Nadu at an estimated cost of Rs.762.30 crore inaugurated by Chief Minister M.K. Stalin read now

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று(வியாழன்) காஞ்சிபுரம் மாவட்டம் ஓரகடத்தில் ரூ.762.30 கோடி மதிப்பீட்டில், தொழில் 4.0 தொழில்நுட்ப மையங்களை திறந்து வைத்தார். அப்போது முதல்வர் மு.க. ஸ்டாலின் கூறினதாவது:

தொழிற்சாலைகள் நிறைந்த பல்வகை பொருளாதாரத்துடன் கூடிய மாநிலமாக தமிழகம் இருக்கிறது. மேலும் தமிழகமானது இன்றைக்கு எல்லாத் துறைகளிலும் தலை நிமிர்ந்து, ஏன் கம்பீரமாக நிற்கின்றது. இந்தியாவிலேயே தமிழகத்தில்தான் அதிகளவில் தொழிற்சாலைகளும் பணிபுரியும் தொழிலாளர்களும் காணப்படுகிறார்கள். அதுமட்டுமல்லாது தமிழகமானது வளரும் புதிய துறைகளிலும் முன்னணியில் உள்ளது. உலகளாவிய வர்த்தகத்தில் தமிழகத்தினுடைய சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களானது முக்கிய பங்கு வகிக்கின்றன.

அதுமட்டுமல்லாது 2022-2023-ம் ஆண்டில் நம் அரசு பொறுப்பேற்றப் பிறகு 7 லட்சத்து 33 ஆயிரத்து 296 ஆக நிறுவனங்களின் எண்ணிக்கையும், தொடர்ந்து 47 லட்சத்து 14 ஆயிரத்து 148 ஆக உருவாக்கப்பட்ட வேலைவாய்ப்புகளின் எண்ணிக்கையும் அதிகரிக்கப்பட்டுள்ளது. மேலும் தமிழக அரசானது திறன் பயிற்சிகளை 2 ஆயிரத்து 877 கோடியே 43 லட்சம் ரூபாய் மதிப்பில் 71 அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் அளிப்பதற்காக அதனை தொழில்நுட்ப மையங்களாக தரம் உயர்த்தப்பட அதிவிரைவுடன் செயல்படுத்தி வருகின்றது. இதற்காக புரிந்துணர்வு ஒப்பந்தங்களும் மேற்கொள்ளப்பட்டது. அதனைதொடர்ந்து அதனுடைய முதற்கட்டமாக இன்று 22 அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் தொழில்நுட்ப மையங்களை திறந்து வைப்பதில் பெருமகிழ்ச்சி கொள்கிறேன். மேலும் தொழில் 4.0 தரத்திலான தொழிற்பிரிவுகளில் ஏறக்குறைய 10 ஆயிரத்து 40 மாணவர்கள் ஒவ்வொரு வருடத்திலும் சேர்ந்து பயிற்சி பெறுவார்கள். இதன் மூலமாக உள்நாடு மற்றும் வெளிநாடுகளில் இருக்கும் முன்னணி நிறுவனங்களில் வேலை வாய்ப்புகள் கிடைக்கக்கூடும். இவ்வாறாக நிகழ்ச்சியின்போது முதல்வர் மு.க. ஸ்டாலின் கூறினார்.

RECENT POSTS IN JOBSTAMIL.IN