கடந்த 2019 ஆம் ஆண்டு சீனாவில் உள்ள யுகான் நகரில் கொரோனா என்ற கொடிய வைரஸ் முதன் முதலில் கண்டறியப்பட்டது. அதன்பின், இந்த கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பரவி பல லட்சகணக்காண உயிர்களை பழிவாங்கியது. இந்த கொரோனா வைரஸானது உலகம் முழுவதும் தீவிரமாக பரவ தொடங்கியதால் பல்வேறு நாடுகளில் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. இதனால், பல்வேறு நாடுகளும் பொருளாதார ரீதியில் முடங்கி போனது.

அதன்பின், கொரோனா வரஷை தடுப்பதற்காக தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டது. அதனை பொதுமக்கள் செலுத்தி வந்த நிலையில், உலக நாடுகளில் கொரோனா பரவல் சற்று குறைய தொடங்கியது. ஆனால், ஒரு சில வாரங்களில் கொரோனா வைரஸ் உருமாறி மீண்டும் பரவ தொடங்கியது. அதன்பின் மீண்டும் சில நாடுகளில் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு அதன்பின், கொரோனா வைரஸ் கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது.
இந்நிலையில், தற்பொழுது மீண்டும் ஒரு புதிய வகை கொரோனா வைரஸ் அமெரிக்கா, டென்மார்க், இஸ்ரேல் உள்ளிட்ட நாடுகளில் கண்டறியப்பட்டுள்ளது. இந்த புதிய வகை கொரோனா வைரஸின் பெயர் பிஏ.2.86 என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்த வைரஸ் பரவல் மற்றும் அவற்றின் வீரியத்தை அமெரிக்க நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையம் கண்காணித்து வருவதாக தெரிவித்துள்ளது.
Also Read : மாதம் 1,00,000 சம்பளத்தில் வேலை பார்க்க ஆசையா? ECHS திருச்சி நிறுவனத்தில் வேலை அறிவிப்பு!
இதுகுறித்து அமெரிக்க நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையம் கூறுகையில், பிஏ.2.86 என்ற புதிய வகை கொரோனா வைரஸ் குறித்து பல்வேறு தகவல்கள் கேகரிகப்பட்டு வருவதாகவும் விரைவில் இந்த வைரஸ் தொடர்பாக அறிக்கை வெளியிடப்படும் என்றும் தெரிவித்துள்ளது.