இனி 500 ரூபாய் நோட்டுகளும் செல்லாது? ரிசர்வ் வங்கி ஆளுநர் வெளியிட்ட முக்கிய விளக்கம்!!

new information 500 rupee notes no longer valid Important explanation issued by Reserve Bank Governor read now

நாட்டில் புழக்கத்தில் இருந்த ரூ.2000 நோட்டுகள் செல்லாது திரும்ப பெறுவதாக கடந்த சில வாரங்களுக்கு முன் ரிசர்வ் வங்கி அறிவித்தது. இதுகுறித்து ரிசர்வ் வங்கி வெளியிட்ட அறிவிப்பில், பொதுமக்கள் தங்களிடம் இருக்கும் 2,000 ரூபாய் நோட்டுகளை இம்மாதம் 23-ம் தேதி முதல் வங்கிகளில் கொடுத்து கணக்கில் வரவு வைத்துக்கொள்ளலாம் அல்லது வேறு ரூபாய் நோட்டுகளாக மாற்றிக் கொள்ளலாம் எனவும் இதற்கான கால அவகாசம் செப்டம்பர் 30 வரை அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், தற்பொழுது 2000 ரூபாய் நோட்டுகளை போலவே 500 ரூபாய் நோட்டுகளையும் வங்கிகள் திரும்ப பெற உள்ளதாகவும் மீண்டும் புதிய 1000 ரூபாய் நோட்டுகளை அறிமுகப்படுத்த உள்ளதாகவும் தகவல் பரவி வருகிறது. இதுகுறித்து மத்திய ரிசர்வ் வங்கி ஆளுநர் கூறுகையில், புழக்கத்தில் இருக்கும் 500 ரூபாய் நோட்டுகள் திரும்பப்பட மாட்டாது என்றும் புதிய 1000 ரூபாய் நோட்டுகளை அறிமுகப்படுத்தும் திட்டம் இல்லை என்றும் கூறியுள்ளார். மேலும், இதுதொடர்பான பொய்யான தகவலை பரப்ப வேண்டாம் எனவும் தெரிவித்துள்ளார்.


RECENT POSTS IN JOBSTAMIL.IN