
தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் பொதுமக்களின் நலனை கருத்தில் கொண்டு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். அதிலும் குறிப்பாக பெண்கள் சமூகத்தில் தலை நிமிர்ந்து வாழ வேண்டும் என்பதற்காக பெண்கள் சுய உதவி குழு, பெண்கள் சுய தொழில் செய்ய தையல் மிஷின் போன்ற பல்வேறு திட்டங்களை தொடங்கி வைத்துள்ளார். அந்த வகையில், கடந்த செப்டம்பர் 15 ஆம் தேதி தமிழக முதல்வர் அவர்களால் தொடங்கப்பட்ட ஒரு திட்டம்தான் “கலைஞர் மகளிர் உரிமைத் தொகை” திட்டம்.
இந்த திட்டத்தின் மூலம் குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.1000 அவர்களது வங்கி கணக்கில் வரவு வைக்கப்படும். மகளிர் உரிமைத் தொகையை பெற தமிழகம் முழுவதிலும் இருந்து சுமார் 1 கோடியே 63 லட்சம் பெண்கள் விண்ணபித்திருந்தனர. அதில், 1 கோடியே 6 லட்சத்து 50 ஆயிரம் பெண்கள் தகுதியானவர்களாக தேர்வு செய்யப்பட்டு அவர்களின் வங்கி கணக்கில் ரூ.1000 வரவு வைக்கப்பட்டது.
ALSO READ : தங்கம் விலை இன்று ரூ.240 குறைஞ்சிடுச்சு – Today Gold Rate
இத்திட்டத்தில் நிராகரிப்பட்டவர்கள் மீண்டும் மேல்முறையீடு செய்யலாம் எனவும் இதில் விண்ணப்பிக்காதவர்களும் விண்ணபிக்கலாம் என்றும் தமிழக அரசு தெரிவித்தது. அதன்படி, தற்பொழுது வரை சுமார் 11 லட்சத்து 85 ஆயிரம் விண்ணப்பங்கள் வந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில், விண்ணப்பித்தவர்களில் தகுதியுடையவர்களை தேர்வு செய்யும் பணி தற்பொழுது தீவிரமாக நடைபெற்று வருவதாகவும் கூறப்படுகிறது.
மேலும், தீபாவளி பண்டிகை வருகிற 12 ஆம் தேதி வர இருப்பதால் மேல்முறையீடு மற்றும் புதிதாக விண்ணபித்தவர்களுக்கு மகளிர் உரிமைத்தொகை முன்கூட்டியே வழங்குவது குறித்து ஆலோசனை நடைபெற்று வருகிறது. இதில், மேல்முறையீடு செய்து அதில் தகுதியானவர்கள் என்று தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு மகளிர் உரிமைத்தொகை வருகிற 10 ஆம் தேதி வழங்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனை தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் துவங்கி வைக்க உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.