தமிழ்நாடு அரசில் புதிய அதிகாரிகள் நியமனம்!

தமிழ் நாட்டில் அரசு திட்டங்கள் அனைத்தும் முறையாக செயல்படுத்தப்படுகிறதா? என்பதையும் அதனை எப்படி செயல்படுத்துகின்றன? என்பதை கண்காணிக்கவும் தமிழகத்தில் உள்ள 12 மாவட்டங்களுக்கு புதிய கண்காணிப்பு அதிகாரிகளை அரசு நியமித்துள்ளது.

new news Appointment of new officials in the Tamil Nadu government! read more details

தமிழ்நாட்டில் உள்ள 25 மாவட்டங்களுக்கு ஏற்கனவே கண்காணிப்பு அதிகாரிகள் நியமனம் செய்யப்பட்டுள்ள நிலையில், தற்பொழுது அரியலூர், கோவை, கள்ளக்குறிச்சி, காஞ்சிபுரம், நாகை, நாமக்கல், புதுக்கோட்டை, ராமநாதபுரம், ராணிப்பேட்டை, சேலம், திருப்பத்தூர் மற்றும் திருப்பூர் ஆகிய மாவட்டங்களுக்கு புதிய அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், புதிதாக நியமிக்கப்பட்ட அதிகாரிகள் அரசு திட்டங்கள் எவ்வாறு செயல்படுத்தப்படுகிறது மற்றும் முறையாக செயல்படுத்தப்படுகிறதா என்பதை கவனிப்பார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், தமிழக அரசு மக்களுக்கு தேவையான உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. புதிதாக நியமிக்கப்பட்ட அதிகாரிகள் இந்த திட்டங்கள் முறையாக செயல்படுத்தப்படுகிறதா என்பதை கண்காணிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


RECENT POSTS IN JOBSTAMIL.IN