சென்னையில் மெட்ரோ ரயில் சேவையானது பெரும்பாலான இடங்களில் தொடங்கப்பட்டது. இந்த ரயில் சேவை மூலம் தினசரி லட்சகணக்கான மக்கள் பயணத்தை மேற்கொள்கின்றனர். இவ்வாறாக மெட்ரோ ரயில் நிலையங்களில் இருந்து பிற இடங்களுக்கு செல்ல பயணிகள் ஆட்டோக்கள், ஓலா கார், அரசின் மினி பேருந்து போன்றவற்றை பயன்படுத்தி வருகின்றனர்.

இந்நிலையில், சென்னை மெட்ரோ ரயில் நிலையங்களிலிருந்து மற்ற இடங்களுக்கு செல்ல அவர்களின் பயணத்தை எளிதாக்கும் விதமாக எலக்டரிக் ஆட்டோ திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. மெட்ரோ நிறுவனம் இந்த சேவையை லெக்கோ என்ற நிறுவனத்துடன் இணைந்து செயல்படுத்த உள்ளது. இந்த சேவையானது குடியிருப்பு பகுதிகளில் இருந்து மெட்ரோ ரயில் நிலையங்களுக்கும் அங்கிருந்து 5 கி.மீ.தூரத்திற்குள் இருக்கும் சுற்று வட்டார பகுதிகளுக்கும் வழங்கப்படுகிறது.
முதல்முறையாக இந்த ரயில் திட்டம் மதுரவாயல் பைபாஸில் உள்ள ஒரு பெரிய குடியிருப்புக்குள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த திட்டம் கொளத்தூர், முகப்பேர் உள்ளிட்ட பகுதிகளுக்கும் விரிவுப்படுத்தப்படுகிறது. கி.மீ.ருக்கு ரூ 20 கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. மாதந்தோறும் பயன்படுத்துவோருக்கு கட்டணச் சலுகையில் 20 சதவீதம் குறைக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
RECENT POSTS IN JOBSTAMIL.IN
- திருப்பதி ஏழுமலையானை தரிசனம் செய்ய போறீங்களா நீங்க? இந்த தேதிகளில் டோக்கன்கள் கிடையாதாம்… திருப்பதி தேவஸ்தானம் அதிரடி அறிவிப்பு!
- அடேங்கப்பா… ஆடி காரில் வந்து காய்கறி விற்பனை… இணையத்தை கலக்கும் விவசாயி…! எங்கனு பாருங்க!
- தமிழ்நாடு அரசின் ஒருங்கிணைந்த சேவை மையத்தில் வேலை ரெடி? சீக்கிரமா அப்ளை பண்ணுங்க!
- அண்ணா பல்கலைக்கழகத்தில் வேலை செய்ய விருப்பமா? வந்தாச்சு புதிய வேலை வாய்ப்பு! அப்ளை பண்ணிடலாம் வாங்க!
- தமிழ்நாடு அரசு வேலை வேண்டுமா? பாரதியார் பல்கலைக்கழகத்தில் வேலை செய்யலாம் வாங்க!