டெங்கு காய்ச்சல் அதிகரிப்பால் பள்ளிகளுக்கு புது உத்தரவு..!

0
New order for schools due to increase in dengue fever-Dengue Fever Cases Increase New Rules For School

பருவகாலங்களில் கொசுக்கள் அதிகரித்து காணப்படுவது வழக்கம். இந்நிலையில், தற்பொழுது பருவகாலம் தொடங்கியுள்ள நிலையில் கொசுக்களால் ஏற்படும் காய்ச்சல் அதிகமாகி வருகிறது. உத்தர பிரதேச மாநிலத்தில் பருவகாலம் காரணமாக கொசுக்களால் பரவக்கூடிய காய்ச்சல்களில் ஒன்றான டெங்கு காய்ச்சல் தற்பொழுது அதிகரித்து வருகிறது.

இந்த டெங்கு காய்ச்சல் பிரயாக்ராஜ், கான்பூர் உள்பட பல்வேறு நகரங்களில் அதிக அளவில் காணப்படுகிறது. பிரயாக்ராஜ் நகரில் அமைந்துள்ள ஒரு பள்ளி கூடத்தில் கடந்த சில நாட்களுக்கு முன் நிறைய மாணவர்கள் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட நிலையில், ஓரு நாள் பள்ளிக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில், நகரங்களில் பல பகுதிகளில் டெங்கு பாதிப்பு அதிக அளவில் காணப்படுகிறது. இதுபற்றி பிரயாக்ராஜ் தலைமை மருத்துவ அதிகாரி நானக் ஷரண் கூறுகையில், மாவட்டத்தில் டெங்குவை ஆய்வு செய்வதற்காக, பல பகுதிகளில் பூச்சி கொல்லிகள் தெளிக்கப்பட்டு கொசுக்கள் ஒழிக்கப்பட்டு வருகின்றன என கூறியுள்ளார்.

டெங்கு காய்ச்சல் அதிகரிப்பதால் முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத் கடந்த சனிக்கிழமை மாநில சுகாதார துறை அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார். கான்பூரில் டெங்கு காய்ச்சல் அறிகுறியுடன் தினசரி 60 முதல் 70 பேர் டெங்கு வார்டில் சேருகின்றனர். இதில் டெங்கு உறுதியானவர்களில் பெரியவர்கள் 6 பேரும் குழந்தைகள் 7 பேரும் என மொத்தம் 13 பேர் அரசு மருத்துவமனையில் சேர்ந்து உள்ளனர் என டாக்டர் ஷைலேஷ் குமார் சிங் கூறியுள்ளார்.

இந்நிலையில், டெங்கு காய்ச்சல் பரவாமல் இருக்க பள்ளி கல்வித்துறை அனைத்து பள்ளிகளுக்கும் புதிய நடைமுறையை அறிவுறுத்தியுள்ளது. இதில், பள்ளிக்கு வரும் அனைத்து மாணவ, மாணவிகளும் கைகள், கால்கள் முழுமையாக மூடியிருக்கும்படி முழுக்கை சட்டைகளையும் மற்றும் முழு கால் பேண்ட் அணிந்து வருமாறு தெரிவித்துள்ளது. அதுமட்டுமல்லாம் பள்ளி வளாகங்களில் குப்பைகள் சேராமல் தவிர்க்கவும் அறிவுறுத்தி உள்ளது.

RECENT POSTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here