ரேஷன் கடைகளில் விரைவில் புதிய நடைமுறை..! அமைச்சர் சக்கரபாணி அறிவிப்பு!

0
New procedure in ration shops soon Minister Chakrapani's announcement-Ration Shop Eye Scanning Started Soon

ரேசன் கார்டுகளை வைத்து ரேசன் கடைகளில் பொருட்களை வாங்குவது வழக்கம். ஆனால் தற்பொழுது ரேசன் கார்டுதாரர்களுக்கு ஒரு புதிய அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. புதிய அறிவிப்பில், இனி ரேசன் கடைகளில் கருவிழி அடையாளம் மூலம் பொருட்கள் வழங்கப்படும் என்று உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி தெரிவித்தார்.

இந்நிலையில், இதற்கான சோதனை தொடங்கியுள்ளதாகவும் விரைவில் அனைத்து நியாய விலைக்கடைகளிலும் அமல்படுத்தப்படும் என்று தெரிவித்தார். திருவாரூர் மாவட்டத்தில் 69-வது இந்திய கூட்டுறவு வார விழாவில் கலந்து கொண்ட உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி 1,262 பயனாளிகளுக்கு கடனுதவிகளை வழங்கினார்.

அதன்பின், நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் கருவிழி அடையாளத்தை பயன்படுத்தி ரேசன் பொருட்களை வாங்கும் திட்டம் தொடங்கப்பட்டுள்ளதாகவும் விரைவில் நடைமுறைக்கு வரும் என்றும் தமிழகத்தில் இனி அமைக்கப்படும் நியாய விலைக்கடைகளில் கட்டாயம் கழிவறை அமைக்கப்படும் இதில் நியாய விலை கடைக்கு வருவோர் காத்திருக்க வேண்டிய சூழலில், அதனை பயன்படுத்திக் கொள்ளலாம் என்றும் கூறினார்.

RECENT POSTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here