புத்தாண்டு கொண்டாட்டத்தில் புதிய ரூல்ஸ்..! அமைச்சர் மா. சுப்பிரமணியன் அறிவிப்பு

New rules in the New Year celebration Minister Ma. Subramanian announcement -Mask Must Be Worn During New Year Celebrations

மாண்டஸ் புயல் தாக்கத்தால் குடிசை வீடு ஒன்று இடிந்து விழுந்து ஒரு குடும்பத்தில் 2 நபர் எதிர்பாராத விதமாக உயிர் இழந்தனர். அவர்களின் குடும்பத்திற்கு 4 லட்சம் நிதி உதவியை அமைச்சர் மா.சுப்பிரமணியன் வழங்கினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் மா.சுப்பிரமணியன், நேற்று சீனாவில் இருந்து 1 பெண் மற்றும் 2 பெண் குழந்தைகள் உடன் மதுரை வந்துள்ளனர். அவர்களுக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

இந்நிலையில், சீனா, தென்கொரியா வழியாக வந்தவர்களை பரிசோதனை செய்ததில் தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. பாதிப்புக்கு உள்ளான இருவரும் விருதுநகரில் உள்ள அவரது வீட்டில் தனிமைபடுத்தபட்டு உள்ளனர். அவர்களை அழைத்து சென்றவரையும் பரிசோதனை செய்ய சொல்லி இருக்கிறோம். அவர்கள் இருவருக்கும் சிறிய அளவில் மட்டுமே பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

மேலும், கோயம்பேடு மார்க்கெட், புத்தாண்டு கொண்டாட்டம், தியேட்டர், வணிக வளாகம், வீட்டு விஷேசம் உள்ளிட்ட எல்லா இடங்களிலும் கொரோனா விதிமுறைகளை பின்பற்ற வேண்டும். புத்தாண்டு கொண்டாட்டதிற்கு சுய கட்டுப்பாடு தான் அவசியம். கட்டுப்பாடுகள் எப்போது விதிக்கப்பட வேண்டும் என்ற நிலை வருகிறதோ அப்போது மத்திய சுகாதாரதுறை பரிந்துரை செய்யும் பட்சத்தில் அதனை இங்கு செயல்படுத்துவோம் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.

RECENT POSTS IN JOBSTAMIL

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here