
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வளம் வருபவர் நடிகர் தனுஷ். கடந்த சில ஆண்டுகளுக்கு இவர் நடித்து வெளியாக “வேலையில்லா பட்டதாரி” திரைப்படம் தமிழ் சினிமாவையே திரும்பி பார்க்க வைத்தது. அதன்பிறகு, இவர் நடித்த படங்கள் இவருக்கு தொடர்ந்து ஹிட் கொடுத்துதான் வருகிறது. அந்த அளவிற்கு சிறப்பான கதை கொண்ட படங்களை தேர்ந்தெடுத்து நடிகர் தனுஷ் நடித்து வருகிறார்.
இந்நிலையில், தற்பொழுது நடிகர் தனுஷ் இயக்குனர் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் “கேப்டன் மில்லர்” திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படம் மிகவும் பிரமானடமான முறையில் சத்யஜோதி நிறுவனம் தயாரித்து வருகிறது. இப்படத்தில் நடிகர் தனுஷுடன் இணைந்து பிரியங்கா மோகன், சந்தீப் கிஷன், ஜான் கொக்கன், நிவேதிதா சதீஸ், குமாரவேல், டேனியல் பாலாஜி, மூற், நாசர் உள்பட பல பிரபலங்கள் நடித்து வருகின்றனர். இந்த படத்தின் இசையமைப்பாளராக ஜீவி பிரகாஷ் உள்ளார்.
ALSO READ : “ஜப்பான்” படத்தின் சிறப்பு காட்சிகளுக்கு அனுமதி வழங்கிய தமிழக அரசு..!
கேப்டன் மில்லர் திரைப்படம் ஒரு வரலாற்று திரைப்படமாக உருவாகி வருவதால் இந்த படத்தின் மேல் இருக்கும் எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது. சமீபத்தில் இப்படத்தின் டீசர் மற்றும் பாடல் வெளியாகி ரசிகர்களை அதிகம் கவர்ந்துள்ளது. இதையடுத்து, தற்பொழுது கேப்டன் மில்லர் திரைப்படத்தின் புதிய அப்டேட் ஒன்றை படக்குழு வெளியிட்டுள்ளது. அதன்படி, நடிகர் தனுஷின் “கேப்டன் மில்லர்” திரைப்படம் அடுத்த ஆண்டு பொங்கலுக்கு வெளியாகும் என்று தெரிவித்துள்ளது.