நீங்களும் புத்தாண்டுக்கு உறுதிமொழி எடுப்பீங்களா..! இதோ அதற்கான சூப்பர் டிப்ஸ்..

New Year Resolution In Tamil

நீங்கள் இந்த புத்தாண்டிலிருந்து ஆரோக்கியமாகவும், சிறந்த மனிதராகவும் விளங்க வேண்டும் என்பதற்காக சிறந்த ரெசல்யூசன் டிப்ஸ்கள் இந்த பதிவில் கொடுக்கப்பட்டு உள்ளது. இந்த டிப்ஸ் அனைத்தும் உங்கள் எதிர்காலத்தை பிரகாசமாக மாற்ற உதவியாக இருக்கும்.

வாழ்வில் ஆரோக்கியமாகவும் ,மகிழ்ச்சியாகவும் வாழ்வதற்கு நீங்கள் உங்கள் அன்றாட நாட்களில் மாற்றங்களை கொண்டு வர வேண்டும். அதற்கு நீங்கள் எடுக்கும் ரெசல்யூசன் அன்றாடம் செயல்படுத்த கூடிய ஒன்றாக இருக்க வேண்டும். அவற்றை நாள்தோறும் தொடர்ந்து செய்வதன் மூலம் நல்ல பயன் மற்றும் நல்ல தீர்வு கிடைக்கும்.

நீங்களும் புத்தாண்டுக்கு உறுதிமொழி எடுப்பீங்களா..! இதோ அதற்கான சூப்பர் டிப்ஸ்..

 • அதிகாலை எழுதல்.
 • உங்கள் சருமத்தை பராமரித்தல்.
 • அதிக தண்ணீர் குடித்தல்.
 • அன்றாட பொழுதுபோக்கிற்கு நேரம் செலவிடல்.
 • உங்கள் உடமைகளை சுத்தமாக வைத்துயிருத்தல்.
 • ஆரோக்கியமான உணவுகளை உட்கொள்ளுதல்.
New Year Resolution Ideas

நீங்கள் ஒரு ஃபிட்டான நபராகவோ அல்லது ஆரோக்கியமாக வாழ வேண்டும் என எண்ணினால், அதற்கு நீங்கள் உங்களுடைய உடல் மற்றும் மனதை மேம்படுத்த வேண்டும். அதற்கு சில குறிக்கோள் எடுத்து கொள்ள வேண்டும். அவை,

 • நாள்தோறும் ஒரு மணி நேரம் உடற்பயிற்சி செய்ய வேண்டும்.
 • உடற்பயிற்சிக்கான இலக்கை அடைய வேண்டும்.
 • தியானம் செய்தல்.
 • யோகா செய்தல்.
 • புதிய உடற்பயற்சிக்கு முயற்சி செய்ய வேண்டும்.

ALSO READ >ஆங்கிலப் புத்தாண்டின் சுவாரஸ்ய வரலாற்றை தெரிந்து கொள்வோம் வாங்க..

நீங்கள் நாள்தோறும் செய்ய கூடிய வேலைகளை சிறிது நேரம் ஒதுக்கி வைத்து விட்டு, புத்தகம் படித்தல், டைரி எழுதுதல், தோட்டக்கலை செய்தல் போன்றவற்றில் ஈடுபடுத்தி கொள்ள வேண்டும். இதன் மூலம் அன்றாட நடைமுறை வாழ்வு வேறுபடும். அதற்கு கீழ்காணும் சில உறுதிமொழிகளை மேற்கொள்ளுங்கள்.

 • குடும்பத்துடன் நேரம் செலவிடல்.
 • தோட்டக்கலையில் ஈடுபடுதல்.
 • நாள்தோறும் செய்திதாள் படித்தல்.
 • பத்திரிக்கைகளை பராமரித்தல்.
New Year Resolution

கடந்த ஆண்டு உங்களின் இலக்குகளை அடைய சில இடையூறுகள் இருந்து இருக்கலாம். இதனால் நீங்கள் நினைத்த கனவு இடத்திற்கு செல்ல முடியாமல் இருக்கும். அந்த வகையில் உங்கள் கனவு பயணத்தை தொடங்கி அவற்றை நிறைவேற்றும் வகையில் இந்த ஆண்டு இருக்கும். பயணம் ஒன்றே உங்களை நீங்கள் யார் என்று அறிய உதவும். அதற்கான முயற்சியில் ஈடுபடுங்கள்.

 • உங்களின் கனவு இடத்திற்கு செல்லுதல்.
 • பணி உயர்வு பெறுதல்.
 • சமையல் செய்வதற்கான வேலையை செய்தல்.
 • நீச்சல் கற்று கொள்ளுதல்.
 • யோகா, நடனம் மற்றும் இசை தொடர்பான சான்றிதழ் பெறுதல்.
 • எடை குறைக்க உடற்பயற்சி செய்தல்.

இந்த ஆண்டில் இருந்து நீங்கள் எளிமையான மனிதராகவும், நன்றி உணர்வு உள்ளவராகவும் விளங்க வேண்டும் என்னும் விருப்பம் இருப்பின் இந்த ஆண்டு அதற்கு ஒரு தொடக்க கட்டமாக இருக்கும் சில தீர்மானங்களை எடுங்கள்.

 • உணவை கடையில் வாங்கி உண்பதை தவிர்க்க வேண்டும். வீட்டில் உட்கொள்ளும் பழக்கத்தை மேற்கொள்ளுங்கள்.
 • சுகாதாரத்தை கடைபிடித்தல்.
 • எந்த ஒரு சிறிய செயலாக இருந்தாலும் நன்றி சொல்லி பழகுங்கள்.
New Year Resolution For Self

எதிர்பாராத அவசர நாட்களில் தேவைகளை பூர்த்தி செய்ய உங்கள் ஊதியத்தில் இருந்து சிறு தொகையை சேமிப்பு செய்யுங்கள். உதாரணமாக: கொரோனா போன்ற ஊரடங்கு காலங்களில் தீடிரென ஏற்படும் வேலை இழப்பு போன்ற சூழலில் செலவை சமாளிப்பது கடினம். அதற்கு சேமிப்பு தொகை மிகவும் அவசியம். மேலும் குடும்பம் மற்றும் உங்களுக்கு சுகாதார காப்பீடு வாங்க வேண்டும். இந்த உறுதிமொழி எடுப்பதன் மூலம் எதிர்காலம் நலமாக இருக்கும்.

 • சம்பளத்தில் இருந்து பாதி தொகையை சேமிக்க வேண்டும்.
 • பங்குகளில் முதலீடு செய்தல்.
 • சுகாதார காப்பீடு திட்டம் பெறுதல்.

சமையல் மற்றும் தையல் போன்ற ஏதேனும் ஒரு திறனை வளர்த்து கொள்ளுதல். பதவி உயர்வு பெற மேற்படிப்பு படிக்க வேண்டும். உங்கள வாழ்க்கையில் பெரிய மாற்றத்தை கொண்டு வர ஏதேனும் ஒரு திறனை வளர்த்து கொள்ள உறுதிமொழி ஒன்றை எடுக்க வேண்டும்.

ALSO READ >எப்பொழுதும் மகிழ்ச்சியாக இருக்க வேண்டுமா? அதற்கு நீங்கள் பின்பற்ற வேண்டிய சில பழக்கங்கள்!

 • சமையல் கற்று கொள்ளுதல்.
 • மேற்படிப்பு படித்தல்.
 • புதிய மொழியை கற்று கொள்ளுதல்.
 • ஏதேனும் ஒரு திறனை கற்று கொள்ளுதல்.
 • நல்ல பழக்கத்தை கடைப்பிடிக்க வேண்டும்.
 • இந்த ஆண்டு முதல் மது, புகைப்பிடித்தல் போன்ற கெட்ட பழக்கங்களை கைவிடுவது குடும்பம் மற்றும் உடலுக்கு மிகவும் நல்லது.
 • வேலை சுமை, வேலையில் உள்ள குறிக்கோள் அடைதல் போன்ற காரணங்களால் குடும்பத்தினர் அல்லது அன்புக்குரியர்வர்களை கைவிடலாம். உறவுகளுக்கு நேரம் கொடுப்பதன் மூலம் நல்ல மகிழ்ச்சியான வாழ்வை வாழ முடியும். இதற்காக சில உறுதிமொழிகளை கடைபிடிக்க வேண்டும்.
 • உங்களின் உறவுகளுக்கு அதிக நேரம் செலவிடுங்கள்.

எந்த ஒரு உறுதிமொழி எடுத்தாலும் அவற்றை வாயில் சொல்வதோடு விட்டு விடாமல் அவற்றை விடாமுயற்சியுடன் செய்து வெற்றி பெறுங்கள். ஒருபோதும் அவற்றை கைவிடாதீர்கள். இந்த வருடத்தில் மேற்காணும் உறுதிமொழிகளை கடைபிடிப்பதன் மூலம் எதிர்கால வாழ்க்கையை நலமுடம் வாழ முடியும். வாழ்க்கையில் முன்னேற இந்த உறுதிமொழி உதவியாக இருக்கும். இந்த வருடம் புதிய நம்பிக்கை கதவு திறக்கட்டும். வாழ்வில் வளம் பெருகட்டும். இதன் மூலம் நாங்களும் புத்தாண்டு வாழ்த்துகளை தெரிவித்து கொள்கிறோம். இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்….


RECENT POSTS IN JOBSTAMIL.IN

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here