தேசிய தொழில்நுட்ப நிறுவனத்தில் இருந்து தற்போது வெளியான அறிவிப்பில் ஜூனியர் ரிசர்ச் ஃபெலோ (Junior Research Fellow) பணிக்கான காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளது. இப்பணிக்கு தகுதியான நபர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் 30.11.2023 அன்று வரை பெறப்பட உள்ளது. இந்த பணிக்கு விண்ணப்பிக்க விருப்பம் உள்ள விண்ணப்பதாரர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்க்கபடுகின்றன.

NIT JRF பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் நபர்கள் அரசு அல்லது அரசு சார்ந்த கல்வி நிறுவனங்களில் Engineering பாடப்பிரிவில் ME/MTech தேர்ச்சி பெற்றவராக இருக்க வேண்டும். மேலும் விண்ணப்பதாரர்கள் GATE தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றவராகவும் இருக்க வேண்டும். NIT Trichy அறிவிப்பின்படி பணிக்கு தேர்வு செய்யப்படும் நபர்களுக்கு மாதம் ரூ.37,000/- ஊதியமாக வழங்கப்பட்டுள்ளது.
தேசிய தொழில்நுட்ப நிறுவனம் அறிவிப்பில் உள்ளபடி, விண்ணப்பதாரர்கள் நேர்காணல் முறையில் தேர்வு செய்யப்படுவார்கள். JRF பணிக்கு விண்ணப்பிக்க தகுதி மற்றும் திறமை உள்ள விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பின் கீழுள்ள விண்ணப்பத்தை பூர்த்தி செய்து தேவையான சான்றிதழ்களின் நகலை இணைத்து அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள முகவரிக்கு மற்றும் [email protected], [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும். நவம்பர் மாதம் 30ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
NIT வேலைவாய்ப்பில் உள்ள அனைத்து விவரங்களையும் கவனத்தில் கொண்டு, கொடுக்கப்பட்டுள்ள NIT RECRUITMENT NOTIFICATION லிங்கை சரி பார்த்து விண்ணப்பியுங்கள்.