Today News in Tamil 2023
தமிழகத்தின் முன்னாள் மறைந்த முதல் அமைச்சர் மு.கருணாநிதியின் நூற்றாண்டு பிறந்த நாள் விழாவின் நினைவாக, சென்னை அரியாங்குப்பம் தொகுதி வீராம்பட்டினத்தில் கருணாநிதிக்கு முழு உருவ சிலை அமைக்கப்பட்டுள்ளது. இதற்க்கான திறப்பு விழா மற்றும் பொதுக்கூட்டம் நேற்றைய தினத்தில் நடைபெற்றது. இந்த சிலையை தி.மு.க. துணை பொதுச்செயலாளர் ஆ.ராசா எம்.பி மற்றும் புதுச்சேரி சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர் சிவா எம்.எல்.ஏ. ஆகியோர் திறந்து வைத்தனர்.
இந்த விழாவில் ஆ.ராசா எம்.பி. பேசிய அவர்,
கருணாநிதி அவர், தன்னுடைய அறிவால், ஆற்றலால், உழைப்பால் , தியாகத்தால் இந்திய அரசியலமைப்பில் ஆற்றியுள்ள பங்கு எண்ணற்றவையாகும். மேலும் சமீபத்தில் சனாதனம் குறித்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசியது பெரும் விவாதமாக மாறிவிட்டது. இதனையடுத்து ஆ.ராசா எம்.பி அமித்சாவுக்கு சவால் கொடுத்துள்ளார்.
சனாதனம் என்றால் என்ன என்பதை முதலில் தெரிந்து கொள்ளுங்கள். புதுச்சேரியில் இருந்து மத்திய உள்துறை மந்திரி அமித்ஷாவுக்கு சவால் விடுகிறேன். பா.ஜ.க வில் அமித்ஷா எவ்வளவு பெரியவராக இருந்தாலும் வாங்க, திறந்த வெளியில் டெல்லியில் விவாதிப்போம். சனாதனம் வேண்டாம் என்று எதிர்த்ததால் தான் தமிழிசை கவர்னர், வானதி சீனிவாசன் வக்கீல், அண்ணாமலை ஐ.பி.எஸ். அதிகாரியாக ஆனார்கள்.
நமது தேசத்திலே ஜாலியன் வாலாபாக் படுகொலை நடந்து சுமார் 100 ஆண்டுகள் கழித்து இங்கிலாந்து நாட்டின் பிரதமர் இந்தியாவுக்கு வருகை புரிந்து, எங்களுடைய அரசு செய்தது மிக பெரிய பாவம் என கூறி மண்டியிட்டு மன்னிப்பு கேட்டார். ஆனால் மனிப்பூரில் பழங்குடியினரை கொன்று, அங்குள்ள இளம் பெண்களை ஆடை ஏதும் இல்லாமல் இழுத்து சென்று, மனித இனத்துகே பெரிய கேவலத்தை உண்டாக்கியுள்ளனர். இச்செயலை நியாயப்படுத்தும் அம்மாநிலத்தின் முதல் அமைச்சரை நாடாளுமன்றத்தில் மோடி மற்றும் அமித்ஷா பாராட்டுகின்றனர். இப்படிப்பட்ட மோசமான ஊழலும், மதவாதமும் வளர்ந்து கொண்டிருக்கிற இத்தகைய ஆட்சியை நாம் எல்லோரும் தூக்கி எறிவதற்கு நிச்சயம் உறுதியேற்க வேண்டும் என இவ்வாறு அவர் கூறினார்.