இனி பள்ளிகளில் மதிய உணவில் சிக்கன்..! அதிரடி அறிவிப்பு!

No more chicken in lunch in schools.. Action Announcement-West Bengal Mamata Govt To Serve Chicken And Furit

தமிழ்நாட்டில் முதலமைச்சர் ஸ்டாலின் மத்திய உணவு திட்டத்துடன் சேர்த்து காலை உணவு திட்டத்தையும் தொடங்கி வைத்தார். இது தமிழக மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது.

மேற்கு வங்கத்தில் ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் முதல்வர் மம்தா பானர்ஜி, அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் மதிய உணவில் சிக்கன் மற்றும் பருவகால பழங்கள் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

மேற்கு வங்க மாநிலத்தில் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ் கட்சி ஆட்சி செய்து வருகிறது. அதே சமயம் ஆளும் கட்சிக்கும் பா.ஜ.வு.க்கும் இடையே அம்மாநிலத்தில் தொடர்ந்து மோதல் அதிகரித்து வரும் நிலையில், அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கான திருத்தப்பட்ட மதிய உணவு மெனுவில் சிக்கன் மற்றும் பருவகால பழங்கள் வழங்கப்படும் என்றும், ஜனவரி முதல் ஏப்ரல் வரை 4 மாதங்களுக்கு இந்த திட்டம் செயல்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

அரசின் இந்த திட்டத்திற்கு எதிர்கட்சிகள் தரப்பில் கடுமையாக விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டு வரும் நிலையில், பாஜக உள்ளிட்ட எதிர்கட்சிகள் இத்திட்டத்திற்கு எதிரான குரல் கொடுக்க தொடங்கியுள்ளன. மேலும் 4 மாதங்கள் மட்டுமே இத்திட்டம் செயல்பாட்டில் இருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளதால், அடுத்து வரவிருக்கும் உள்ளாட்சி தேர்தலை கருத்தில் கொண்டு ஆளும் கட்சி இத்திட்டத்தை கொண்டு வந்துள்ளதாக எதிர்கட்சிகள் தரப்பில் கூறப்பட்டு வருகிறது.

இது தொடர்பாக மேற்கு வங்க கல்வி அமைச்சர் பிரத்யா பாசு தி இந்தியன் எக்ஸ்பிரஸ்ஸிடம் கூறுகையில், “நிதி பற்றாக்குறை” காரணமாக இத்திட்டம் 4 மாதங்களுக்கு மட்டுமே அமல்படுத்தியதாக கூறியுள்ளார். மேலும் மக்கள் மீது அக்கறையுள்ள “எங்கள் முதல்வர் தலைமையின் கீழ், மாணவர்களுக்கு அதிகபட்ச நன்மைகளை வழங்க நாங்கள் தொடர்ந்து பாடுபட்டு வருகிறோம். இந்த நோக்கம் ஒருபடி மேலே சென்றுள்ளது. எங்களின் சேமிப்பிலிருந்து மாணவர்களுக்கு கோழிக்கறி மற்றும் பருவகால பழங்கள் வழங்கும் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளோம்.

ஆண்டு முழுவதும் இந்த திட்டத்தை தொடர்வதில் நாங்கள் மிகவும் ஆர்வமாகவும் மகிழ்ச்சியாகவும் இருக்கிறோம். ஆனால் அதற்கு அதிக நிதி தேவைப்படும், துரதிர்ஷ்டவசமாக, எங்களிடம் அவ்வளவு நிதி இல்லை என்று பாசு கூறியுள்ளார்.

RECENT POSTS IN JOBSTAMIL.IN

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here