Home Current Affairs ரேஷனில் இனி பொருட்கள் கிடையாது! வரவுள்ளது ரேஷன் கார்டு திட்டத்தில் புதிய மாற்றம்!

ரேஷனில் இனி பொருட்கள் கிடையாது! வரவுள்ளது ரேஷன் கார்டு திட்டத்தில் புதிய மாற்றம்!

0

No more items in the ration A new change in the ration card scheme is coming: ரேஷன் கார்டு என்பது அரசு அங்கீகரிக்கப்பட்ட ஒரு குடும்பத்தின் அடையாள ஆவணமாகும், இதன் மூலம் அரிசி,பருப்பு,கோதுமை, மண்ணெண்ணெய் போன்ற பொருட்களை மானிய விலையில் அரசு கூட்டுறவு ரேஷன் கடைகளில் வாங்க முடியும்.

No more items in the ration A new change in the ration card scheme is coming

No more items in the ration A new change in the ration card scheme is coming
No more items in the ration A new change in the ration card scheme is coming

நிதி வசதி இல்லாதவர்கள் அல்லது வறுமைக் கோட்டுக்குக் கீழே உள்ள (BPL – below poverty line) பிரிவைச் சேர்ந்தவர்கள் மற்றும் உணவுப் பொருட்களை வாங்குவதில் சிரமப்படுபவர்களுக்கு ரேஷன் கார்டு மிகவும் உதவியாக உள்ளது. அதுமட்டுமல்லாமல், ரேஷன் கார்டு அடையாளம் மற்றும் முகவரிக்கான சான்றாகவும் செயல்படுகிறது, மேலும் குடியிருப்புச் சான்றிதழ், வாக்காளர் ஐடி போன்றவற்றுக்கு விண்ணப்பிப்பது போன்ற நோக்கங்களுக்காகப் பயன்படுத்தலாம். மேலும் மத்திய மற்றும் மாநில அரசுகளின் நலத்திட்ட உதவிகளை பெறவும், அரசு மானியம், சமையல் எரிவாயு சிலிண்டர் உள்ளிட்டவைகளை பெற ரேஷன் கார்டு அவசியமாகும். ஆரம்பத்தில் இந்த ரேஷன் கார்டை பெற நாம் தாலுகா அலுவலகத்திற்கு சென்று அலைந்து பெற வேண்டி இருந்தது.

தற்போது இருக்கும் காலகட்டத்தில் கைபேசியும் இணையமும் இணைந்து மிக எளிய முறையில் அந்தந்த மாநில அரசின் உணவு வழங்கல் துறையின் அதிகாரப்பூர்வ இணையதளம் வாயிலாக எளிமையாக இருந்த இடத்திலே ரேஷன் கார்டுக்கு விண்ணப்பித்து கொள்கிறார்கள். இந்த நிலையில் சில அதிக வருமானம் பெறுவோர்களும் ரேஷன் கார்டு திட்டம் வாயிலாக பயன் பெற்று வருவதாக புகார்கள் எழுந்துள்ளது. இந்த ரேஷன் கார்டு திட்டம் வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள மக்களுக்கு மட்டுமே செயல்படுத்தப்பட்டு வருகிறது. ஆனால் இதில் வசதி படைத்த செல்வந்தர்களும் அரசு பலன் மற்றும் பல மானிய பொருட்கள் வாங்கி வருவதாக கூறுகின்றனர்.

இதனால் உணவு பொருட்கள் பற்றாக்குறையால் ஏழை எளியவர்களுக்கு அரசு பலன்கள் கிடைப்பதில் சிரமம் நீடிக்கிறது. தற்போது இருக்கும் ரேஷன் கார்டு தொடர்பான திட்ட விதிகளை மாற்றி அமைக்க மத்திய அரசு முடிவு எடுத்துள்ளது. இந்த விதிமுறைகள் அமலுக்கு வந்த பிறகு தகுதியற்றவர்களின் ரேஷன் கார்டு ரத்து செய்யப்பட்டு ரேஷன் உதவி ஏதும் கிடைக்காது என்று கூறப்படுகிறது. கடந்த 5 ஆண்டுகளில் இந்தியா முழுவதும் மொத்தம் 2.81 கோடிக்கும் மேல் ரேஷன் கார்டுகள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக அரசு தரப்பில் தகவல்கள் தெரிவிக்கபட்டது.

வரவிருக்கும் புதிய ரேஷன் கார்டு திட்டத்தினால் வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ள மக்களுக்கான சலுகை விலையில் பொருட்கள் மற்றும் அரசு சார்பில் கிடைக்கும் மானியம் போன்றவை விரைவாக அவர்களுக்கு கிடைத்து, அதன்மூலம் அவர்களின் வாழ்வாதாரம் உயரும் என நம்பப்படுகிறது.

More Details for Ration Card in India

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here