திருப்பதி கோவில் கோபுரத்தில் தங்க முலாம்-தேவஸ்தானம் அறிவிப்பு

Notice of Gold Plated-Devasthanam on Tirupati Temple Gopuram-Tirupati Temple Gopuram To Be Gold Plated

திருப்பதி எழுமலையான் கோவிலில் மூலவர் கோவில் அமைந்துள்ளது. அந்த மூலவர் கோவில் கருவறையின் பெயர் ஆனந்த நிலையம் என்று அழைக்கப்படுகிறது. ஆனந்த் நிலையம் மேல் உள்ள தங்க கோபுரத்திற்கு ஆனந்த நிலை விமானம் என்று அழைக்கப்படுகிறது.

இந்நிலையில், கி.பி 839 ஆம் அண்டு தொண்டைமான் சக்ரவர்த்திதான் இந்த இந்த ஆனந்த நிலைய விமானத்தை கட்டியதாக கூறபப்டுகிறது. இதற்கு முதன்முதலில் விஜயதந்தி விக்ரம வர்மா என்ற அரசர்தான் தங்க கவசம் அமைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது. அதன்பின் 1958 ஆம் ஆண்டு திருப்பதி தேவஸ்தானம் ஆனந்த நிலைய விமானம் மேல் உள்ள 12 டன் எடையுள்ள பொன் முலாம் பூசப்பட்ட தகடுகள் அகற்றப்பட்டு 18 லட்சம் ரூபாய் செலவில் போன் முலாம் பூசப்பட்டது.

இதனை தொடர்ந்து, திருப்பதி கோவிலில் உள்ள ஆனந்த நிலைய விமானத்துக்கு தங்க முலாம் பூசி பல வருடங்கள் ஆன நிலையில், தற்பொழுது திருப்பதி தேவஸ்தானம் அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் தங்க முலாம் பூச உள்ளதாக தெரிவித்துள்ளது. இதற்காக திருப்பதி உண்டியலில் பக்தர்கள் செலுத்திய தங்கம் பயன்படுத்தப்படும் என்று தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.

RECENT POSTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here