Children’s Day 2022: நவம்பர் 14 குழந்தைகள் தினம் வரலாறு

0
November 14 Children's Day History and Nehru birthday

நம்முடைய சுதந்திர இந்தியாவின் முதல் பிரதமரான பண்டிட் ஜவஹர்லால் நேருவின் பிறந்த நாளான நவம்பர் 14-ம் தேதி குழந்தைகள் தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது

இந்தியாவின் முதல் பிரதமராக இருந்தவர் ஜவஹர்லால் நேரு. இவர் பிரதமராக இருக்கும் பொழுது குழந்தைகளின் எதிர்காலம் மற்றும் அவர்களின் கல்வி போன்றவற்றிற்கு முக்கியத்துவம் கொடுத்தார். இவர் நிறைய புத்தகங்களை எழுதியுள்ளார். அதில் ‘இன்றைய குழந்தைகள்தான் நாளைய தலைவர்கள்’ என்று அதில் குறிப்பிட்டிருந்தார்.

நேரு அனைத்து குழந்தைகளின் மீதும் அளவற்ற பாசத்தினை காட்டியதால் அனைவராலும் ‘நேரு மாமா’ என்று அன்போடு அழைக்கப்படுகிறார். இவருடைய பிறந்த நாளான நவம்பர் 14 ஆம் தேதியை இந்தியாவில் குழந்தைகள் தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது.

நவம்பர் 14 குழந்தைகள் தினம் வரலாறு

ஜவஹர்லால் நேரு அவர்கள் இந்தியா சுதந்திரம் அடைந்த பிறகு, நமது நாட்டை மேலும் முன்னேற்றமடைய செய்வதற்கு கல்வி மிகவும் அவசியமானது என்பதை உணர்ந்து கல்வித்துறையை மேம்படுத்தி அனைத்து குழந்தைகளுக்கும் அடிப்படை கல்வி இலவசம் மற்றும் கட்டாயமானது என்பதை அனைவருக்கும் உணர்த்தினார். அதுமட்டுமில்லாமல் உயர் கல்விக்காக 1950 ஆம் ஆண்டு காரக்பூரில் ஐ.ஐ.டி பல்கலைக்கழகத்தை தொடங்கி நாட்டின் முன்னேற்றத்திற்கு வழி வகுத்தார்.

Children's Day 2022

நேரு மாமாவின் பிறந்த நாளான நவம்பர் 14 ஆம் தேதி பொது விடுமுறை அறிவிக்கப்படாமல் அனைத்து பள்ளிகளிலும் பேச்சு போட்டி, கட்டுரைப் போட்டி மற்றும் நடனம் போன்ற பல விளையாட்டுகள் நடத்தப்பட்டு அவருடைய பிறந்தநாளை கொண்டாடுகின்றனர். நேருவின் அத்தனை புகைப்படங்களிலும் மிக சிறப்பு பெற்றவை குழந்தைகளோடு அவர் இருக்கும் புகைப்படம்தான். நேரு குழந்தைகளை மிகவும் நேசித்தார். இவர் குழந்தைகள் மத்தியில் மிகவும் பிரபலமாக இருந்ததால், ‘சாச்சா நேரு’ (Chacha Nehru) என்று போற்றப்பட்டார்.

குழந்தைகள் தினம்

இந்நிலையில், நவம்பர் 14 ஆம் தேதி உலகம் முழுவதும் குழந்தைகள் தினம் கொண்டாடப்பட்டாலும் குழந்தை தொழிலாளர்கள் அதிகரித்து தான் வருகிறது. எனவே நாட்டில் குழந்தை தொழிலாளர் இல்லாமல் அனைத்து குழந்தைகளுக்கும் கல்வி கிடைக்க வேண்டும் என்பதே குழந்தைகள் தின விழாவின் நோக்கமாகும். ‘இன்றைய குழந்தைகள் நாளைய இந்தியாவின் எதிர்காலம். நாம் அவர்களை வளர்க்கும் விதம் நாட்டின் எதிர்காலத்தை நிர்ணயிக்கும்’ என்று நேரு கூறினார்


RECENT POSTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here