இனி அனைத்து பள்ளிகளிலும் இந்த வகுப்புகள் கட்டாயம்..! சற்றுமுன் அரசு அறிவித்து புதிய அறிவிப்பு!!

Now these classes are compulsory in all schools Recently the government announced a new notification this happy news for you

பொதுவாக மாணவர்கள் படிப்பில் மட்டுமல்லாமல் விளையாட்டு, கலை போன்ற பல்வேறு துறைகளில் வெற்றிபெற வேண்டும் என்று அனைத்து மாநில அரசுகளும் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். அந்த வகையில், மத்திய பிரதேச மாநில அரசு இதுகுறித்து ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

அந்த அறிவிப்பில், மத்திய பிரதேசம் மாநிலத்தில் இயங்கி வரும் அரசுப் பள்ளிகளில் 1 முதல் 8 ஆம் வகுப்பு பயின்று வரும் மாணவர்களுக்கு விளையாட்டு வகுப்புகள் கட்டாயமாக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது. இந்த புதிய நடைமுறையை அனைத்து அரசு பள்ளிகளும் பின்பற்ற வேண்டும் என்று தெரிவித்துள்ளது.

மாணவர்களுக்கு விளையாட்டை கற்றுக்கொடுப்பதன் மூலம் அவர்களுக்கு சிறுவயதிலிருந்தே மாணவர்களிடம் ஒழுக்கம், குழுப்பணி, விடாமுயற்சி போன்றவற்றை விதைக்கலாம் என தெரிவித்துள்ளது. அதுமட்டுமல்லாமல், மாணவர்களின் ஒட்டுமொத்த வளர்ச்சியையும் மேம்படுத்தும் நோக்கில் வரும் கல்வியாண்டு முதல் 1 முதல் 8 ஆம் வகுப்பு வரை மாணவர்களுக்கு கட்டாய விளையாட்டு வகுப்புகள் நடத்தப்படும் எனவும் தெரிவித்துள்ளது.


RECENT POSTS IN JOBSTAMIL.IN