இனி இந்த பொருளும் ஆன்லைன்ல கிடைக்குமாம்..! அமைச்சரின் அதிரடி அறிவிப்பு!!

Now this product is also available online Ministers action announcement

தமிழகத்தில் மிகவும் பிரபலாமான பால் கொள்முதல் நிலையமாகவும் அரசுக்கு சொந்தமானதாகவும் செயல்பட்டு வருவது “ஆவின்” பால் கொள்முதல் நிலையமாகும். இந்நிலையில், இந்த ஆவின் கொள்முதல் நிலையத்தில் விற்பனை செய்யப்படும் பொருட்களை இனி ஆன்லைனில் விற்பனை செய்ய உள்ளதாக அமைச்சர் தெரிவித்தார்.

தமிழக சட்டபேரவையில் பேசிய பால்வளத்துறை அமைச்சர் நாசர் அவர்கள் 48 புதிய திட்டத்திற்கான அறிவிப்புகளை வெளியிட்டார். அதில், புதிதாக மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியம் திருவாரூரில் உருவாக்கப்படும் என்று கூறினார்.

மேலும், ஆவின் பொருட்களை ஆன்லைனில் விற்பனை செய்வதற்கான நடவைக்கை எடுக்கப்படும் எனவும் பயனாளர்களின் தேவைகேற்ப புதிய பால் பொருட்கள் அறிமுகப்படுத்தப்படும் என்றும் கூறினார். அதுமட்டுமல்லாமல் தேசிய பால்வள திட்டத்தின் மூலம் தூய பால் உற்பத்தியை உறுதி செய்வதற்கு 8 கோடியே 75 லட்சம் மதிப்பில் கிராமப்புற ஆய்வகங்கள் மேம்மபடுத்தப்படும் என்று தெரிவித்துள்ளார்.


RECENT POSTS IN JOBSTAMIL.IN